Friday, July 7, 2017

பாபாவை நம்ப வேண்டும்!



நமக்கு எது சிறந்ததென்று பாபாவிற்குத்தெரியும். எனவே சந்தேகமோ, கேள்வியோ இல்லாமல் நாம் அவரை நம்ப வேண்டும். பாபாவைச்சந்தித்ததும் அவரது குரு செய்த முதல் செயல், மிகுந்த சவாலான, சோதனையான நிலையில் அவரை வைத்ததுதான்.
பொதுவாக பாபா பக்தர்களின் அனுபவங்களை எடுத்துக்கொண்டால், பாபா நம் வாழ்வுக்குள் வரும்போது, நமது நம்பிக்கையை உறுதிப்படுத்துவதற்காக நம்மை பரிசோதனைக்கு உட்படுத்துகிறார். அவரால் ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய தகுதி நம்மிடம் உள்ளதை நாம் நிரூபிக்கவேண்டும்.
நமது நம்பிக்கையும் நமது தகுதியும், கடினமான சோதனைகளாலும் கொந்தளிப்பான புயல்களாலும் பரிசோதிக்கப்படுகின்றன. நமது இருப்பையே தலைகீழாக அசைத்துவிடுகிறார். பரிசோதனைகளைத் தாங்க இயலாதவர்கள், பாபாவை விட்டு விலகி, வீசும் காற்றை தாக்குப்பிடிக்க இயலாத பலவீனமான இலைகளைப்போல் வாடிப்போய் வீழ்ந்துவிடுகிறார்கள்.
ஆனால், தீவிர நம்பிக்கையுடனும் கேள்வி கேட்காத சரணாகதியுடனும் பற்றிக்கொள்பவர்கள், துன்பமான காலங்களைக்கூட புன்னகையுடனும், பாபாவிடம் தளராத நம்பிக்கையுடனும் எதிர்கொள்பவர்கள், அவரது அன்பையும் ஆதரவையும் நிரந்தரமாக பெறுவார்கள்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...