அன்பு
குழந்தையே!, உனக்கு ஒரு விஷயத்தை முதலில் தெளிவுபடுத்த விரும்புகிறேன். என்னை நீ வணங்கினால், நான் உனக்கு அதிகமாக சோதனைகளைத்தான் கொடுப்பேன் என்று மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு, பீதியடைவதை முதலில் நிறுத்து.. என்னிடம் வந்ததால் நீ சோதனைக்குட்படுத்தப்படுவதில்லை. உன் கர்ம வினைகள்
உன்னை இந்தப் பாடாய்படுத்துகிறது. அந்தச்சூழலில் என்னை மாதிரியான சத்குரு, உனக்கு அமைவதென்பது, நீ செய்த பாவத்திற்கிடையில் ஏதோ கொஞ்சம் புண்ணியம் செய்திருப்பதால்தான்.
அதனால் பயப்படாமல் என் துணையுடன் உன் கர்மவினைகளை கழி.
அடுத்து நான் சொல்ல விரும்புவது, சாயியின் பக்தன் என்பது
சாதாரணமான காரியமல்ல. யாரிடமும் இல்லாத மனோ திடம் உடையவனாக இருப்பான். என்னை குருவாக அடைந்த எவனும், அவ்வளவு சாதாரணமாக
எதற்கும் கலங்க மாட்டான். தலை போகிற விஷயமானாலும் என் சாயி இருக்க என்ன கவலை என்று
எதிர்த்து நிற்பான்.
கோழையைப்போல தற்கொலைக்கு முயல மாட்டான். எதற்குமே தற்கொலை தீர்வாகாது. இனிமேல் என்
குழந்தைகளிடமிருந்து வாழவே விருப்பமில்லை என்ற சொற்களை நான் கேட்கக் கூடாது.
உன் வாழ்க்கையே இருண்டு போனாலும் அதில் என்னால் விளக்கேற்ற முடியும். அந்த நம்பிக்கை உனக்கிருந்து யார் என்ன
சொன்னாலும் கவலைப்படாது என்னுடைய சங்கத்தில் இருந்து பார். நீ சோதனைகளை
சந்திக்கிறாயா? இல்லை சாதனைகளை சந்திக்கப்போகிறாயா என்று?
ஆனால் அதற்கு என்ன முக்கியம்?
பொறுமை
குருவிடம் திடமான நம்பிக்கை
No comments:
Post a Comment