நீ தண்டால் எடுக்க ஆரம்பி. (கடுமையானப் பயிற்சி). பாலைப் பற்றிய கவலை (பலன்
பற்றிய கவலை) உனக்கு வேண்டா. ஏனெனில், உனக்குப் பின்னாலேயே நான் தயாராக ஒரு வட்டிலில் பாலை
வைத்துக் கொண்டு நிற்கிறேன்.
ஆனால், நான் தண்டால் எடுக்கிறேன், நீர் எனக்கு வட்டில் வட்டிலாகப் பாலைத் திருப்தியுறும் வரை கொடும் என்று
கேட்டால் (பலனைக் கேட்டால்), ஆ., அதெல்லாம் எனக்குத்
தெரியாது என்று சொல்லிவிடுவேன். செயலாற்றுபவன் துடிப்பு உள்ளவனாக இருக்கவேண்டும்
என்பார் பாபா. (சத்சரித்திரம் அத்தியாயம் 19)
பாபாவின் இவ்வாக்குறுதியை சத்தியம் என்று எடுத்துக் கொண்டு எவர் செயல்படுகிறாரோ,
அவர் இந்த
உலகத்திலும் மேலுலகத்திலும் சந்தோஷம் என்னும் சுரங்கத்தைக் கண்டுபிடித்தவர் ஆவார்.
No comments:
Post a Comment