"எந்த ஒரு சூழ்நிலையிலும்
கவலைகொள்ளாதே..பயப்படாதே..அப்படிப்பட்ட நிலையில், நீ என்னை மனதார
நினைத்தால், மறுகணமே நான் உன்னுள்
இருப்பேன்..உனக்கு அதைத்தாங்கும் வலிமையையும் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் தைரியத்தையும் உன்னுள் இருக்கும் நானே
அளிக்கிறேன்.. எனது பக்தனின் வாழ்வில்
நடக்கும் எந்த ஒரு செயலும் எனது அனுமதியின்றி நடக்காது. அவனது வாழ்வில் என்ன நடந்தாலும் அவனது நன்மைக்காக மட்டுமே நான் நடத்துகிறேன்
என்பதை முழுமையாக நம்புவான். அவன் வாழ்வில் அனுபவிக்கும்
ஒவ்வொரு சுகங்களும் எனது ஆசீர்வாதத்தால் அளிக்கப்பட்டது.
தாய் எப்படி தன் குழந்தைக்கு ஒவ்வொன்றையும் பார்த்துப்பார்த்து செய்வாளோ, அதைப்போன்று சாயி பக்தர்களாகிய உங்களுக்கு நான் பார்த்துப் பார்த்துச்செய்வேன். நீங்கள் எதற்கும் பயப்படவேண்டாம். சிறிதும் எது குறித்தும் கவலைப்படவே வேண்டாம். .என்னையே முழுமையாக நம்புங்கள்.. நடக்கப்போகும் அற்புதங்களை
மகிழ்ச்சியோடு அனுபவியுங்கள்..
இது பாபா சொன்ன சத்திய வாக்கு
---ஓம் சாய் ராம்..
No comments:
Post a Comment