Saturday, July 29, 2017

உங்களிடம் ஓடோடி வருவேன்



எனது கதைகளை வாசிப்பவர்கள், மகிழ்ச்சியும் நிரந்தர திருப்தியும் கொண்ட பாதையில் செல்வார்கள்
எனது கதைகளும் உபதேசங்களும் ஒவ்வொரு வீட்டிலும் இருந்து படிப்பவர்களின் மனதுக்கு ஆறுதலைத் தந்து அவர்கள் வாழ்வில் நிம்மதியையும் ஆனந்தத்தையும் அளிக்கட்டும்.
அச்சமோ, வலியோ உங்களைப் பீடிக்கும்போது, எனது புத்தகத்தை உங்கள் நெஞ்சுக்கு நெருக்கமாக வைத்து என் பெயரை உச்சாடனம் செய்யுங்கள்..... உங்களது வேதனைகள் அனைத்தும் மறைந்து மகிழ்ச்சியும் அமைதியும் உங்களைச் சூழ்ந்துகொள்ளும்.
கலியுகத்தில், என் கதைகளை வாசித்து, என் புகழைக் கேட்டு, என் பெயரை உச்சாடனம் செய்வது, வாழ்வில் மகிழ்ச்சியையும் இறப்பில் முக்தியையும் அளிக்கும்...ஏனெனில், எனது கதைகளை வாசிப்பதென்பது என்னுடனேயே இருப்பதற்குச் சமம்.
 இக்கதைகள் உங்களைத் தூய்மைப்படுத்தி, உங்கள் குணத்தை மேம்படுத்தட்டும். நோயின் பிடியிலிருந்தும், மரணத்திலிருந்தும்கூட எனதுஅன்பு உங்களைக் காப்பாற்றும்.
எனது கதைகளை, தினந்தோறும் ஒவ்வொரு அத்தியாயமாக வாசியுங்கள்... ஒவ்வொரு பாடத்தையும் உங்கள் மனதில் பதிய வைத்துக் கொண்டு, நேர்மையும் சிறப்பும் தானமும் கொண்ட வாழ்வை வாழுங்கள்.
நீங்கள் செல்லும் எந்தப் பாதையையும் எனது அன்பு ஒளியூட்டி,  நீங்கள் அனுபவிக்கும் எந்த இருட்டையும் கருமேகத்தையும் நீக்கிவிடும்.
என் சொற்களில் நம்பிக்கை வையுங்கள்...உங்களுடன் நான் எப்போதும் இருக்கிறேன். உங்கள் மனதில் நான் வாழ்கிறேன். என்னை நாடும் ஒவ்வொரு முறையும் அன்புடன் என்னை அழைத்தால் உங்களிடம் ஓடோடி வருவேன், என் குழந்தைகளே!

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...