என் அன்பான குழந்தையே.... !
உனக்கு ஒரு விஷயத்தைச் சொல்கிறேன் கேள், நான் உன்னுடன் எங்கும், எப்போதும் இருக்கிறேன்,
நீ் சிறிதும் கவலையில்லாமல் இரு. எந்த ஆபத்திலிருந்தும் நீ முழுமையாகக்காப்பாற்றப்படுவாய் என்பதில் உனக்கு எந்தவித சந்தேகமும் வேண்டாம்.
ஒவ்வொரு வினாடியும்
நான் உன்னுடன் இருக்கிறேன். நீ தனியாக நடப்பதாக நினைக்கிறாயா? உன் பாதை என்னால்
வடிவமைக்கபட்டது. நான் உன் வாழ்க்கையை
உருவாக்கியவன். நான் உன்னுடன் நடைபயிற்சி செய்கிறேன். நீ சிந்தும் கண்ணீர் மற்றும் வலிகளை நான் உணர்வேன். நானே மருந்தாகவும்
மற்றும் நானே உன் படைப்பாளியாகவும் இருக்கிறேன். எனது கண்களை நன்றாக
உற்றுப்பார். உன் வலிகளை மௌனமாகக் குணப்படுத்தி, உனக்கான நல்ல நேரத்தை உருவாக்கிக்கொண்டு இருக்கிறேன். நான் உன்னைப் பாதுகாப்பேன். உன் மீது அன்பாக
இருக்கிறேன். என் அனுமதி இல்லாமல் எதுவும் நடக்காது. எவரும் எதையும் உனக்கு
செய்ய முடியாது. நானும் எந்த தீங்கையும் உனக்கு செய்ய விட மாட்டேன்...!
பாபா...
No comments:
Post a Comment