'தான்' என்ற அகம்பாவத்தை விடுத்து, கருணை, மன்னிக்கும் தன்மை, சேவை மனப்பான்மை, அஹிம்சை போன்ற தெய்வீகக் குணங்களை ஒருவர் தமக்குள் கொண்டு வர முடிந்தால், பாபா அவருடனேயே இருந்து வழிநடத்திச்
செல்கிறார்.
பாபாவிடம் முழுமையாகச்
சரணடைந்தவர்கள், பாபாவிற்கு மிகவும் நெருக்கமானவர்களாக இருந்தார்கள் என்பது, சாயி சத்சரித்திரத்தை படிக்கும்போது தெளிவாகத் தெரிகிறது. பூஜை, புனஸ்காரங்கள், சடங்கு, சம்பிரதாயங்கள் இவையாவும் நம் மனதை நாம் தூய்மைப் படுத்துவதற்கான வழிமுறைகள்
மட்டுமே. இருப்பினும், உள்மனது பரிசுத்தமானதாக இல்லையென்றால், எவ்வளவுதான் வழிபாடுகள் செய்த போதிலும்
சாயி பக்தர் என்ற தகுதியை அடைய முடியாது.
உருவமற்ற
இறைவனை மனத்தால் கற்பனை செய்வதை விட உருவமுள்ள இறைவனைப் பார்ப்பது மிக எளிது. உருவமுள்ள, குணமுள்ள, இறைவனிடம்
அன்பும் பக்தியும் திடமாக
வேரூன்றிய பிறகு,
உருவமுள்ள இறைவனை
அறிந்து கொள்வது தானாகவே பின்தொடர்கிறது. நிர்குணமான, நிராகரமான,
இறைவனை
பக்தர்களுக்குப் புரிய வைப்பதற்கு பாபா கையாண்ட
வியத்தகு உபாயங்கள் எத்தனை எத்தனையோ!
அவரவர்களுடைய
ஆன்மீகத் தகுதிக்கும் திறமைக்குமேற்ப பக்தர்களைத் தனித்தனியாக நிர்வகித்தார்.
பல சந்தர்ப்பங்களில் தரிசனம் தரவும் மறுத்தார். ஒருவரைச் சீரடியிலிருந்து தேசாந்திரியாக வெகுதூரம் அனுப்பி விடுவார். மற்றவரை தனிமையில்
வாழச்செய்வார். பல ஆண்டுகள் இம்மாதிரி அப்பியாசங்களில் ஈடுபட்டால், பாபாவின் உருவமற்ற இருப்பின்மேல் ஏக்கம் அதிகமாகி, உட்கார்ந்து கொண்டிருக்கும் போதும், உறங்கும் போதும், உணவருந்தும் போதும், எந்நேரமும்
பாபா அண்மையில் இருப்பதை பக்தர்கள்
உணர்வார்கள்! இச்செயல்களின் நோக்கம் இதுவே
No comments:
Post a Comment