என் அன்பு குழந்தையே!
உன்னை புரிந்துக் கொள்ளாதவர்களுக்கு மத்தியில் நீ வாழ்கிறாய்,
அவர்கள்
வெளியில் நடிப்பவர்களை உண்மை என நம்பும் மனிதர்கள், உண்மையான பாசமும்
அன்பும் இருப்பவர்கள் அதை ஒரு நாளும் வெளியில் காட்டமாட்டார்கள். வேஷம் போடுவர்களை நம்புகிற அவர்கள் தான் பாவம், அப்படி இருப்பவர்களை குறை சொல்லாதே, உனக்கு ஒரு விஷயம் பிடிக்கவில்லை என்றால், அதை விட்டு நகன்று, அதை
யோசிக்காமல் வாழ கற்றுகொள், உன் வாழ்க்கையில் நான் உன் அன்புக்கு தகுதியானவர்களை அனுப்புவேன், அது வரை நீ பொறுமையாய் இரு,
அதற்குள் உன்னிடம்
அன்பு காட்ட யாரும் இல்லை எனறு புலம்பாதே, உனக்கு நல்லது நடந்தால் அது உனக்கு சந்தோஷத்தை கொடுக்கும்,
இதையே நீ
மற்றவர்களுக்கு நல்லதாய் நினைத்து பார் உன் வாழ்க்கையே அழகாகும், உன் வாழ்க்கையே நிறைவடையும்,
வாழ்க்கையில் உன்
நிம்மதி காற்றை வீசும், உன் அம்மாவாக அப்பாவாக, என் மூச்சைப் போல உன்னை உயிராய் நினைத்துக் காப்பேன், உன்னை விட்டு நான்
விலகுவதும் இல்லை உன்னை விலகி போகும்படி செய்வதும் இல்லை!!! என் கண்ணே!!!
இப்படிக்கு
உன் சாய்அப்பா🕉
No comments:
Post a Comment