நிர்ணயிப்பது நான் தான்!


அன்பு குழந்தாய்!
உன் முன் ஒருவரை நிற்கவைப்பதும், செயல்பட வைப்பதும் இந்த சாயி என்ற சக்தி என்று பல முறை உன்னிடம் கூறியிருக்கிறேன். எந்த வித முன் பந்தமும் இல்லாமல் யாரும் யாரிடமும் செல்வதில்லை. அந்தப் பந்தம் இல்லாமல் ஒருவரையொருவர் சந்திக்கவும் முடியாது. அதே போல் இன்னொன்றும் சொல்கிறேன் கேள். 
உன்னிடம் ஒருவர் எவ்வளவு காலம் தனது உறவைத் தொடர்வது என்பதை நிர்ணயிப்பதும் நான் தான். அதனால் உன்னை விட்டு யார் விலகினாலும் அதையே நினைத்து கவலைப் படாதே. அதே சமயம் அவர்கள் மீது வெறுப்பும் கொள்ளாதே. எல்லாம் நன்மைக்கே என்று எடுத்துக் கொள். அவர்கள் நீ மனக்கஷ்டம் படும்படி நடந்துகொண்டாலும் பதிலுக்கு பதில் நீ எதுவும் செய்யாதே. எதையும் பெரிய விஷயமாக மனதில் போட்டுக் குழப்பிக் கொள்ளாதே. என் விருப்பம் இல்லாமல் எந்த உறவும் உன் வாழ்வினில் கிடையாது என்பதைப் புரிந்துகொள்.
Powered by Blogger.