Friday, July 7, 2017

நான் இருக்க பயமேன்!



அன்பு குழந்தையே…
ஒருவரை நான் உங்கள் முன் வைத்திருப்பதும், அவர்களை செயல்பட வைப்பதும் ஏதோ ஒரு காரணத்திற்காகத்தான் என்பதை அறிந்து கொள்ளுங்கள். காரண காரியங்கள் இல்லாமல் விளைவுகள் இல்லை.
என் மீது நம்பிக்கை வை. அனைத்தையும் அறிந்தவன் நான், அனைத்தையும் செய்பவன் நான், செயலும் நானே! விளைவுகளும் நானே, என் அனுமதி இல்லாமல் ஒரு இலை கூட அசையாது என்கிற போது, எதற்காக நீங்கள் தேவையில்லாமல் வருத்தப்படவேண்டும்?
நீங்களே, உங்களை விரோதியாக்கிக் கொள்வதற்காகவா உங்களை படைத்து, காத்து, உங்களைத் தேடி நான் வந்தேன்? நீங்கள் தான் செயல்படுகிறீர்கள், நான் செயல்படாதவன் என்று நினைக்கவே நினைக்காதீர்கள்.
மனதால் யாரையும் சபிக்காதீர்கள்! யாரைப் பற்றியும் குறையாய் சொல்லாதீர்கள்! அப்போது நான் கொடுக்கும் ஆசீர்வாதங்களை முழுமையாக அனுபவிப்பீர்கள். அன்றைக்கும் அழுவீர்கள்... பாபா உன்னை காண முடியவில்லையே என்றல்ல... பாபா, நான் கேட்டதையெல்லாம் உடனுக்குடனேயே தந்துவிடுகிறாயே என்ற மகிழ்ச்சியில்.."
ஓம் ஸ்ரீ சாய் ராம்.                        

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...