Sunday, July 16, 2017

சாயி நாமம்



கும்மிருட்டு……..
அடர்ந்த காட்டில் போகும் தனி வழி…
கீச்சான்களின் இரைச்சல்….
ஆந்தைகளின் அலறல்….
அக்கம் பக்கத்தில் திரும்பிப் பார்த்தால், பேய் பிசாசுகளாய் காட்சி தரும் மர நிழல்கள்….
எப்படியும் போயே ஆகவேண்டும் என்ற நிர்பந்த நிலையில் பயணிக்கிற நீங்கள்….என்ன செய்வீர்கள்?
உங்களுடைய இஷ்ட தெய்வத்தின் பெயரை உச்சரித்தபடியே நடப்பீர்கள்…
கொஞ்சம் சரசரவென சத்தம் கேட்டாலும் இதயத்தில் ஒரு குலுக்கல் ஏற்படும்…
அப்போது நாம ஜெபம் வேகமாகும்…
இந்த பெயரை உச்சரித்தபடியே காட்டு வழியைக் கடந்த பிறகு, மனம் நிம்மதி அடையும். திருப்தியுடன், பாதுகாப்பாக வீடு வருவீர்கள்.
தனிமையில், இருட்டில், ஆபத்தில் எது உங்களைக் காப்பதாக நீங்கள் உச்சரித்தீர்களோ, அந்த தெய்வத்தின் பெயர்தான் தாரகம். உங்களைக் காப்பாற்றுகிற மந்திரம்.
ராம பக்தர்களுக்கு எப்படி ராம என்ற நாமமோ, சிவனடியாருக்கு எப்படி சிவசிவ என்பது எப்படியோ, அப்படியே சாயி பக்தருக்கு சாயி என்ற பெயரும் மந்திரமாகும். இந்த மந்திரத்தை பயபக்தியோடும், சிரத்தை பொருந்தி மனதோடும் உச்சரிக்க உச்சரிக்க தெய்வ பலம் அதிகரிப்பதை உணரலாம்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...