Thursday, July 27, 2017

செயலாற்றத் தயாராகு! தடை தளர்ந்து போகும்!

அன்பான சாயியின் பிள்ளையே!

தடைகள் என்பவை நம்மை அடுத்தக் கட்டத்திற்கு அழைத்துச் செல்ல ஆயத்தம் செய்கிற விசயம். எனவே தடை வரும்போது தைரியத்தை இழந்து விடாமல், அடுத்த இலக்கை நோக்கிப் பாய்வதற்குத்தயாராக இருக்கவேண்டும்.

அதுவும் சாயி பக்தர்கள் என்பவர்கள் சாமான்யமானவர்கள் கிடையாது. அவர்கள் புண்ணியம் மிகுந்தவர்கள். பாவங்களும், கர்ம கெடுவினையும் தீர்ந்த ஒருவன்தான் சாயி வழிபாட்டை எய்த முடியும் என்று பாபாவே உனக்குச் சொல்லியிருக்கிறார்.

இப்போது நீ செய்யவேண்டியதெல்லாம், சோர்வை நீக்கி புத்துணர்ச்சி பெறவேண்டியதுதான். மனிதர்கள் போடும் தடைகள் மலைகள் அல்ல, தாண்டுவதற்குச் சிரமமாக இருக்கும் என்று மலைத்து நிற்பதற்கு. அவையெல்லாம் மடை திறந்த வெள்ளத்தின் முன்னால் கையால் அள்ளிப் போடப்பட்டுள்ள மணல் குவியலைப் போன்றவை. உன்னை அவை தடுத்து நிறுத்திவிட முடியாது என்பதைத் தைரியமாக நினைத்துக் கொள்.. சிந்தனையை ஒருமுகப் படுத்து. தைரியத்தை வரவழை.. கோழைகளைப் போல கூப்பாடு போடாமல், செயலாற்றத் தயாராகு. தடை தளர்ந்து போகும்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...