Sunday, July 16, 2017

பாபாவின் பாதம் பணிவோம்!



கோடிக்கணக்கான மக்களின் வாழ்வில், மகிழ்ச்சியையும், மறுமலர்ச்சியையும் ஏற்படுத்திய பாபா, இப்போதும் கற்பனைக்கு எட்டாத, நினைத்துப் பார்க்க முடியாத அற்புதங்களை நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். அவரை நம்பி, அவர் பாதங்களை இறுகப்பற்றி கொண்ட ஒவ்வொரு வரும், இந்த பிறவியை இன்னலின்றி கடப்பது உறுதி.
அவரது நாமத்தை தினமும் உச்சரிப்பவர்கள் மிகவும் புண்ணியம் செய்தவர்கள். ஓம் சாய் ஸ்ரீசாய் ஜெய, ஜெய சாய்என்ற மூல மந்திரத்தை சொல்பவர்கள் வாழ்வில் எல்லாவற்றையும் நிச்சயம் பெறுவார்கள். ஆனால் பாபாவிடம் மாசு மருவற்ற மனதை நாம் ஒப்படைக்க வேண்டும். எத்தனையோ லட்சம் பேர் அந்த பாக்கியத்தைப் பெற்றுள்ளனர்.
பாபாவை அவர்கள் கண்கண்ட தெய்வமாக பார்க்கிறார்கள். அவர்கள் வாழ்வில் பாபா இரண்டற கலந்துள்ளார். பாபாவுக்கு நைவேத்தியம் படைக்காமல், ஆரத்தி காட்டாமல் நிறைய பேர் தண்ணீர் கூட குடிப்பதில்லை. இவர்கள் பாபாவின் அருள் மழையில் நனைபவர்கள், ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...