Wednesday, July 26, 2017

என் பார்வைக்கு திரும்பு!



என் அன்புக்குழந்தையே, வாழ்க்கை என்னும் பெருங்கடலில் நீ வாழ்கிறாய். உன்னை நோக்கி வரும் அனைத்துமே ஏற்கனவே நிர்ணயிக்கபட்டது. அவற்றைத்தான் நாம் விதி என்போம். உன் வாழ்க்கையில் விதி என்பது நல்லதோ கெட்டதோ, உன் வாழ்நாளில் தினம் தினம் அசைகின்ற அசைவில் கூட, அது ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டதாய் இருக்கும்.
அப்படி இருக்கையில், ஓரு பக்கம் விதி, இன்னொரு பக்கம் முந்திய பிறவியின் உனது கர்மவினை, இவை இரண்டும் தான், இன்று ஏற்பட்டுள்ள உன் சூழ்நிலைகளுக்குக்காரணம். இவற்றில் இருந்து நீ மட்டும் அல்ல எவரும் தப்ப முடியாது. ஆனால் நீ என் பார்வைக்கு திரும்பினால், உன் வசத்தை நான் கைப்பற்றி, உனக்கான அனைத்து இக்கட்டுகளில் இருந்தும் உன்னைக் காப்பேன்.
என் லீலைகளை தக்க சமயத்தில் நீயே உணர்வாய். உன் வாழ்க்கையில், இனி வ்வொரு அதிசத்தையும், கண்களால் பார்த்து, மனதால் உணர்ந்து அறிவால் அதைப்புரிந்து ஏற்று பக்குவப்படுவாய். ரு மனிதன் வாழ்க்கையில் ஜெயிக்க இரண்டு பேரிடம் முட்டி மோதி சண்டையிட வேண்டும். அப்படி நடக்கும் சண்டையில் ஜெயிப்பது இரண்டுமே அல்ல.
உன்னுள் இருக்கும்  நான் என்ற கேள்விகளுக்கு நீ எந்த நேரத்தில் என் சாய் அப்பா என்று சொல்கிறாயோ, அப்போது முதல் நீ முக்தி என்ற ஞானத்தின் மீது சவாரி செய்யப்போகிறாய் என்று அர்த்தம்.  மேலே நான் சொன்ன அந்த இரண்டு பேர் யார் என்று தானே நீ யோசிக்கிறாய்.
அது உன் மனமும் புத்தியும்தான். இவற்றை ஜெயித்தால், நீ வாழ்க்கையின் முழு அர்த்தத்தை உணர்ந்து விட்டாய் என்று அர்த்தம். உனக்கான வெற்றிக்காலம் ஆரம்பித்து விட்டது. உன்னை விட்டு நான் விலகுவதும் இல்லை. உன்னை என்னை விட்டு விலகிப்போகும்படி நான் செய்வதும் இல்லை. என் உயிரான குழந்தைக்கு அம்மாவாக அப்பாவாக என்றும் துணை நின்று அரவணைப்பேன்!!!
இப்படிக்கு
உன் சாய்அப்பா!!!

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...