உன்னை பாதுகாப்பேன் ..


அன்பு குழந்தையே... 
உனது கண்கள் கலங்கும் ஆனந்தத்தில் காத்திரு. உன்னைக் காப்பது எனது கடமை. எதற்காக கவலை படுகிறாய்? நீ எது செய்தாலும் சரி, என்ன பேசினாலும் சரி, எனக்குத் தெரியாதா என்ன?  பொறுமையாக இரு. 
என்னை நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில் முடிந்தவரை பிறருக்கு உதவுங்கள். அன்னதானம் செய்யுங்கள். எவன் கஷ்டமான சூழ்நிலையில் இருக்கிறான், படிப்பதற்கு வசதி இல்லைஇருக்க இடம் இல்லைஉடுத்த உடை இல்லை,  மேலும் எந்த வித உதவி என்ற சத்தம் கேட்டாலோ அல்லது மறைமுகமாக செய்திகள் வந்தாலோ அவர்களைத் தேடிச் சென்று உதவிகள் செய்யுங்கள். அதுவே நீங்கள் எனக்கு செய்வது போல அர்த்தம் 
இப்போதுப் புரிகிறதா, நான் உன்னை  ஏன் பாதுகாக்கிறேன் என்று. நீ எனது மகன், எதற்காகவும் கலங்காதே, மகிழ்ச்சியாக  இரு, காலம் மாறப்போகிறது, அப்போது உன் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிய ஆரம்பிக்கும்,  உனது வளர்ச்சி கண்டு சுற்றியுள்ள அனைவரும் வியந்து போவார்கள்.  விரைவில் அதற்கான காலம் பதில் சொல்லும். அதுவரை பொறுமையாகக் காத்திரு.. என்னைச் சரணாகதி  அடைந்தால் உன்னை பாதுகாப்பேன் ..
                                                ஓம் ஸ்ரீ சாய் ராம்....
Powered by Blogger.