என் அன்பு குழந்தையே!
உன் மனதில் இருக்கும் அனைத்தும் நான் அறிவேன் உன்
எண்ணோட்டம் என்பது என்னிடம் வந்து, அதன் பிறகு தான், அது உன்னை வந்துச்சேரும். சில நேரம் ஏன் சாய் அப்பா எனக்கு இந்த குதர்க்கமான எண்ணங்கள் தோன்றுகிறது, நான் இவ்வாறு யோசிக்கும் குணம் கொண்டவர் இல்லையே, பிறகு ஏன் என் மனதானது, எப்படி மாட்டு வண்டியில்
இருந்து அச்சாணி விழுந்தால் வண்டி தறிகெட்டு
அடங்காது ஓடுகின்றதோ, அது போல் என் எண்ணங்கள் இங்கும் அங்கும் திசைமாறுகின்றது என்பதுதானே உன் கவலை.
அந்த அச்சாணி முறிவதற்கு முன்னரே, நீ சுதாரித்தால் உன் வாழ்க்கை என்னும் பயணம் சுகமாகி இருக்கும். இல்லை என்றால், வாழ்க்கையில் ஒன்றை நன்றாகப்புரிந்து கொள். ஓடும் தண்ணீரில் நீந்தலாம். ஆனால் அந்த தண்ணீர் காட்டாற்று வெள்ளம் போல் இருந்தால், அது கண் இமைக்கும் நேரத்தில் அடித்துச் சென்றுவிடும்.
நீ சுதாரித்தால் மட்டுமே, உன் எண்ணங்களின்
நிலை அறிந்த பிறகு தான், நீ நிதானத்தில்
செயல்படுகிறாயா அல்லது சந்தர்ப்பத்தின்
குழப்பம் உன்னை இப்படி தேவையில்லாமல் யோசிக்க வைக்கின்றதா என்று தெரிந்து
கொள்ளமுடியும்.
இன்று உன்
சாய்அப்பா உன் மனதில் இருந்து உன் போக்கை ஓர் நொடியில் மாற்றியதை உணர்ந்தாய்
அல்லவா? அதே போல் என்னை நம்பு. உன் வாழ்க்கைக்கு தேவையானதை
எடுத்துரைத்து பக்கபலமாக இருப்பேன் உன்னை விட்டு நான் விலகுவதும் இல்லை உன்னை
விலகிப்போகும்படி நான்
செய்வதும் இல்லை. உன் அம்மாவாக அப்பாவாக உன்னை என் நெஞ்சில் வைத்து காப்பேன்!!!
No comments:
Post a Comment