பாபா ஷீரடியில் ஐந்து வீடுகளிலிருந்து தம் உணவை பிச்சை எடுத்தார். அதைக்
கொண்டு வந்து மசூதியில் உண்பார். ஷீரடியில் அதிகமாகத் தங்கிவந்த திருமதி ஜி. எஸ்.
கபர்டே என்னும் பெண்மணி, பாபாவுக்குத் தினமும் மசூதியில் உணவை நைவேத்தியமாக அளித்து வந்தாள். ஒருமுறை
பாபாவைத் தன் விடுதிக்குச் சாப்பிட வரும்படி அழைத்தாள். சிறிது காலம் இவ்வாறே
தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அவரை அழைத்தாள். ஒருநாள் பாபா, அவளது வீட்டிற்கு வருவதாக
உறுதியளித்தார்; ஆனால் வரவில்லை.
மற்றொரு நாளும் அவள் பாபாவை அழைத்தபோது, அவர் வருவதாக உறுதி
அளித்தார். அன்றைய தினம் அவள் விதவிதமான பதார்த்தங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கும் போது,
அந்த வாசனையால்
தூண்டப்பட்ட ஒரு நாய் அங்கு வந்தது. பாபாவுக்காகத் தூய்மையாகத் தயாரிக்கும்
பண்டங்களை அது தூய்மை கெடச்செய்து விடுமோ என்று திருமதி கபர்டே பயந்தாள். அதை
விரட்டுவதற்குக் கைக்கு எளிதாக எதுவும் கிடைக்காமற் போகவே, அடுப்பிலிருந்து எரிந்துக்கொண்டிருக்கும் விறகு ஒன்றை எடுத்து நாயின் மேல் எறிய, அது ஓடிவிட்டது.
அன்றும் கூடப் பாபா வரவில்லை. எனவே அவள், நைவேத்தியத்தை மசூதிக்கு எடுத்துச் சென்றாள். அவளைப்
பார்த்தவுடன், பாபா "நான் உன் வீட்டிற்க்கு வந்த போது, எரிந்து கொண்டிருக்கும்
விறகுக் கட்டையை என்மேல் எறிந்தாய்" என்றார்.
.திருமதி கபர்டே அவர் கூறியதன்
பொருளை உணர்ந்து, தனது அறியாமைக்காக வருந்தினாள்.
No comments:
Post a Comment