நான் பன்னிரண்டு வருடங்கள் குருபாதங்களில் இருந்தேன். என் குருவைப்போல குரு
கிடைப்பதரிது. அவருடைய சங்கத்தில் நான் அனுபவித்த சந்தோஷத்தை விவரிக்கமுடியாது.
அவருடைய முகத்தைப் பார்த்தவுடனே என்னுடைய
கண்கள் தியானத்தில் மூழ்கிவிடும். வேறெதையும் எனக்குப் பார்க்கத் தோன்றாது.
எனக்குப் பசியோ தாகமோ தெரியவில்லை. அவர் இல்லாவிட்டால் மனம் அவஸ்தைப்பட்டது.
அவரைத் தவிர வேறெதென்மேலும் என்னால் தியானம் செய்யமுடியவில்லை. அவரைத் தவிர எனக்கு
லட்சியம் ஏதும் இல்லை. அவரே நான் எப்பொழுதும் கடைப்பிடிக்கவேண்டிய குறிக்கோள்.
குருவினுடைய திறமை அதியற்புதமானது. என் குருவும் இதையே எதிர்பார்த்தார்.
இதற்குமேல் எதையும் எதிர்பார்க்கவில்லை.
ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
No comments:
Post a Comment