Saturday, July 15, 2017

இது எனது சத்திய வாக்கு



ன்பு குழந்தையே...!
நேற்று எப்படி இருந்தாய்? இன்று எப்படி இருக்கிறாய்? கொஞ்சமாவது வித்தியாசம் தெரிகிறதா உனக்கு?  நான் உன்னுடன் கைப்பிடித்து நடப்பதையும், உன் ஆழ்மனதில் அடுத்து என்ன செய்யவேண்டும் என அறிவுறுத்திக் கொண்டிருப்பதையும் நீ உணர்கிறாயா, இல்லையா?
அந்த வித்தியாசத்தை எப்போது நீ உணர்கிறாயோ, அப்போதே உனக்கு  நல்ல நேரம் ஆரம்பமாகிறது. இதை நினைவில் கொள். நான் இரவு பகலாக இறைவனின் நாமத்தை சொல்வது, என் குழந்தைகளாகிய உங்களின் நலனுக்காகத்தான். இந்த சாயியை நம்பியவர்களுக்கு சர்வ மங்களங்களும் உண்டாகும். இது எனது சத்திய வாக்கு.
இந்த சாயியின் மார்கத்தில் நுழைந்தவர்கள், யாருமே வெறும் கையுடனும், மனக்குறையுடனும் இதுவரை சென்றதில்லை. இனிமேலும் செல்லப் போவதில்லை. சாயியின் மீது நம்பிக்கையுடனும் பொறுமையுடனும் இருந்து பார். அதை விட்டு ஆற்றில் ஓர் காலும் சேற்றில் ஓர் காலும் வைக்காதே. எங்கே முழுமையான நம்பிக்கையும் விசுவாசமும் இருக்கிறதோ அங்கு இந்த சாயி பரிபூரணமாக பிரசன்னமாகிறேன்...!
 விசுவாசம் நிறைந்த இதயத்துடன் என்னை நினைத்தால் போதும். சுயநலம் கருதாது என்னை வழிபடுங்கள். எல்லா மங்களங்களும் விளையும்."
                                                                                                                  ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...