Friday, July 14, 2017

என்னுடைய வார்த்தைகள் உனக்கு மன அமைதி தரும்



நான் பேசிய ஒவ்வொரு சொல்லையும் உலகத்துக்கு எடுத்துரைத்தால் என்னுடைய வார்த்தைகள் உனக்கு மன அமைதி தரும்
· நீ மனதார, இதயபூர்வமான சிரத்தையுடன் என்னை வணங்கி வந்தால் உனக்கு ஆன்மீக சந்தானத்தை தருவேன்
· கங்கை நதிபோன்ற என்னைப் பற்றிய நினைவில் மூழ்கினால் இந்த உலகின் சம்சாரக் கடலில் இருந்து உன்னை கரை ஏற்றுவேன்
· குரு மந்திரத்தை என்னுடைய புனித இடத்தில் ஓதி வந்தால் ஒவ்வொரு மந்திரத்திலும் குருவைக் காண முடியும்
· நீ கண் உறங்காமல் சீரடியில் என்னை இரவு முழுவதும் பூஜித்தால் அதன் பயனை உனக்கு நான் உணர்த்துவேன்
· என் முன் அமர்ந்துக்கொண்டு உன் துயரத்தைக் கூறினால் உன்னுடைய அனைத்து துயரத்தையும் ஆனந்தமயம் ஆனதாக மாற்றுவேன்
· எனக்கு ஒரு மாலை ரோஜாவை அணிவித்தால் உன் வாழ்க்கையை மணமுள்ளதாக மாற்றுவேன்
· என்னுடைய புனித இடத்தில் வந்து தீபம் ஏற்றினால் உன் வாழ்விலும் ஒளியை ஏற்றுவேன்
· என்னுடைய அனைத்து பக்தர்களுக்கும் நீ பிரசாதம் தந்தால் உன்னை நல்லொழுக்கம் உள்ளவனாக்குவேன்
· என்னுடைய புனிதக் கட்டைவிரலை நீ துதித்தால் குருபூர்ணிமா என்ற புனித பண்டிகையின் பலனைத் தருவேன்
· என் முன் நின்று ஓம் என்ற மந்திரத்தைக் கூறினால் இந்த உலகின் அனைத்து ஆனந்தத்தையும் உனக்கு நான் தருவேன்

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...