Saturday, July 8, 2017

கவலைப்படாதே! நான் இருக்கிறேன்!



அன்பு குழந்தையே..
உனது பிரச்சனைகள் என்னவானால் என்ன? நீ அனைத்தையும் கடந்து போகத்தான் பிறந்திருக்கிறாய். கஷ்டப்பட்டாலும் சுகத்தை அனுபவித்தாலும் அது முன் கர்ம வினை பலன் என்பதைக் காட்டுவேன், எனவே நீ இனி எதைப்பற்றியும் கவலைப்படமாட்டேன் என்பதை ஒரு தீர்மானமாகவே வைத்த்துக்கொள்.
இனி எப்படியிருக்கப்போகிறாய் என்பதைப் பற்றி மட்டும் சிந்தனை செய். உனது ஏமாற்றமான சூழ்நிலைகளை மாற்றும் வழிகள் என்ன? நடைமுறை சாத்தியங்கள் என்ன என்பது பற்றி உன் உள்ளத்தில், நான் பேசும்போது கூர்ந்து கவனி. நீ ஆன்மா. உனக்கு சுகமோ, துக்கமோ கிடையாது. அவை இந்த உடலுக்கு மட்டுமே உரியது என்றாலும் நான் இந்த உடலைத்தான் கோயிலாக வைத்து அதில் வசிக்கிறேன். எனவே, இன்று முதல் இந்த உடம்பு சார்ந்த விஷயத்தில் கவனம் செலுத்துவேன். கஷ்டங்களுக்கு முடிவு கட்டுவேன். இனி இஷ்டப்படி எல்லாம் நடக்கும் என்று நீ நம்பிக்கையோடும், பொறுமையோடும், சகிப்புத்தன்மையோடும், சுறுசுறுப்பான மனத்தோடும் நான் இப்படித்தான் இருக்க வேண்டும் என உறுதியாகத்தீர்மானம் செய். அந்தத் தீர்மானத்தை நான் வழிமொழிகிறேன். உன்னை வெற்றியின் பாதைக்கு கைபிடித்து அழைத்துச் செல்கிறேன்...."
ஓம் ஸ்ரீ சாய் ராம்..                       

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...