Friday, July 14, 2017

கொஞ்சம் பொறுமை காத்துக்கொள்



என் அன்பு குழந்தையே!
நான் ஏன் இத்தனை கவலைகளையும், சோதனைகளையும் சுமந்துக்கொண்டே இருக்கிறேன் என்பதுதானே உன் மனக்குமுறல். உன்னை நான் நன்றாக அறிவேன். நீ எதற்கும் பயப்படாதே. உன் நிலையை நான் அறிவேன். இப்போது உள்ள நிலைக்கு ஏற்றவாறு நீ நடந்துக்கொள். பிறகு என்ன தேவை என்பதை அதைப்பிறகு பார்த்துக்கொள்ளலாம்
முதலில் நிகழ்வு சூழ்நிலைகளை புரிந்து கொள். அதற்கு ஏற்றவாறு  நடந்து கொள். என்றைக்குமே உன் சாய் அப்பாக்கு  பிள்ளை நீ. எனக்கு நீ கைக்குழந்தைதான். ஆனால் உன் வாழ்க்கையிலும், நீ குழந்தைத் தனமாகவும் இப்படி இருக்கிறாயே. கொஞ்சம் பொறுப்பாக நடந்து கொள். கஷ்ட நஷ்டங்களை புரிந்து கொள். அதை தெரிந்து புரிந்து நட. உனக்கான நல்லநேரம் வந்துவிட்டது, அதனால் தான் நல்ல வார்த்தையை நீ கேட்கிறாய்.
தெரிந்தவர்கள் சொந்தகாரர்கள் உன்னை என்ன வசைப்பாடினாலும், அது உன்னைத்தீண்டாது. அது உன்னைத்தீண்டவும் விடமாட்டேன். அதற்க்கான பலனை அவர்கள் சந்திப்பார்கள். நீ அதை காதில் வாங்காதே. உன் வீட்டு சூழ்நிலை நிச்சயமாக மாறும். உன் இப்போதைய நிலை கண்டு துவளாதே, கலங்காதே, நம்பிக்கையை இலக்காதே. கொஞ்சம் பொறுமை காத்து கொள்.
உன் சாய் தேவா, எப்பொழுதும் உன்னுடன் நான் இருப்பேன்.  உனக்கு எல்லாம் நல்லதே நடக்கும். முதலில் வாழ்க்கையை நினைத்து பயப்படுவதை நிறுத்து. பயம் புத்தியை துளைக்க வைத்துவிடும்.  பயம் எதிர்மறை எண்ணங்களை உருவாக்கும். அதனால் அதை உன்னிடத்தில் இருந்து துடைத்து எறி.
நிச்சயமாக உன் நிலை மாறி, நீ நிச்சயம் ஆனந்தமாய் வெற்றி பெற்று வாழ்வாய். உன்னை விட்டு நான் விலகுவதும் இல்லை. உன்னை  விலகிப் போகும்படி நான் செய்வதும் இல்லை. என் உயிருக்கு உயிராய் இருக்கும் அன்பான குழந்தை நீ. உன் அம்மாவாக அப்பாவாக என்றும் துணை நிற்பேன்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...