Friday, July 21, 2017

பாரத்தை என்மேல் சுமத்து!




கலியுகம் என்றாலே ஒரு மாபெரும் துக்கக்கடல்தான். அதில் வசிக்கும் அனைத்து மனிதர்களும் மீன்களைப் போன்றவர்கள். எப்போதும் நீந்துவது தவிர்க்க முடியாதது. எப்போது ஓய்வாக இருக்கிறாயோ, அப்போது கஷ்டங்கள் வராமலிருக்காது. வாழ்க்கை என்பது பலருக்கு ஒரு நிரந்தரப் போராட்டமே. அந்தப் போராட்டத்தில் அலைச்சல்தான் மிஞ்சுமேயொழிய, சாந்தி இருக்காது. 
கிடைத்தபோது உண்பது, கிடைக்காத போது பட்டினி இருப்பது, இது தவிர்க்க முடியாது என்பது உங்களுக்கு நன்றாகத் தெரிந்ததே. இவையெல்லாம் உன்னுடைய முயற்சியே அன்றி, இதனையும் மீறி உனக்குக் கிடைப்பது என்ன? ஒன்றுமில்லை. இருந்தாலும் பலவிதமான ஏக்கத்தையும் விடுவதில்லை. அதற்காகப்போராடுவதையும் விடுவதில்லை. நீ ப்படி என் நினைப்பின்றி அலைந்து கொண்டிருந்தால் நான் உனக்கு எந்த விதத்தில் உதவி செய்ய முடியும்.
நான் நீர் நிறைந்துள்ள குடம் போன்றவன். குடத்தருகில் நீ வராவிடில், உன்னுடைய தாகம் எப்படித் தீரும். நிரந்தரமாக உன்னுடைய தாகத்தை தீர்க்கும் முயற்ச்சியை யார் செய்வார்கள்? எதற்காகச் செய்வார்கள்? உன்னுடைய தேவைக்காக உன்னுடைய சக்தியையே நீ உபயோகிக்க வேண்டும்.
ஏங்குதல், போராட்டங்களை விடுத்து என்னையே எப்போதும் சார்ந்திரு. நான் உன்னுடனேயே இருப்பேன். நான் உன்னுடைய தாகத்தைத் தீர்ப்பதற்காக வருவதற்குள், உன் மனம் சஞ்சலமடைந்து,  எங்கேயோ செல்லுகிறாய். நான் உனக்காவே இருக்கிறேன். பாரத்தை என்மேல் சுமத்து. சாந்தி ஏற்படும்

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...