பாபாவிடம் ஆத்மார்த்தமாக இணையுங்கள்!உங்களுடைய கவலைகள் அனைத்தும் விரைவில் தீரும். பாபாவிடம்  ஆத்மார்த்தமாக இணையுங்கள். எப்பொழுதும் பாபா உங்களுடனேயே இருப்பதாக எண்ணி வாருங்கள். நீங்கள் நடக்கும்போது உங்களுடனேயே பாபாவும் நடந்து வருகிறார். என்றும், நீங்கள் உறங்கும்போதும் அவர் மடியிலேயே நீங்கள் தலையை வைத்து உறங்குகிறீர்கள் என்றும் தொடர்ந்து இவ்விதமாகவே எண்ணிவாருங்கள்.
பாபாவே எல்லாவற்றையும் இயக்குகிறார் என்றும், நடப்பது எல்லாம் பாபாவின் செயலே எனவும் முழுமையாக திடமனதுடன் நம்புங்கள், அப்பொழுது மிகுதியான பலனை நீங்கள் அடைவீர்கள். வியாழக்கிழமை மட்டும் பாபாவிற்கு உகந்த நாள் அல்ல. எல்லா நாளும், எல்லா  நேரமும், எல்லா இடமும் பாபாவிற்கு உகந்ததே. பாபா மீது நம்பிக்கை வைத்திருக்கும் நமக்கு எல்லா இடமும் துவாரகாமாயியே.
இப்பொழுது நீங்கள் இருக்கும் இடத்திலேயே,  உறுதியாக திடமனதுடன் முழு நம்பிக்கையோடு எந்நேரமும் பாபாவினை வணங்குங்கள். நம்பிக்கையோடு அழைக்கும்போது நிச்சயம் வருவதாக அவர் உறுதியளித்துள்ளார். ஓம் சாய்ராம்.
Powered by Blogger.