★பாபாவின் உதி தனது குழந்தைகளுக்கு
அவர் வழங்கியுள்ள கொடை.. அவர் விட்டுச் சென்றிருக்கும் அன்பான சொத்து. பாபாவிடமிருந்து, தங்களது தந்தையிடமிருந்து,
அவரது
குழந்தைகளுக்கு கிடைத்திருக்கும் விலை மதிப்பில்லா வாரிசுரிமை.
★அவரது குழந்தைகள் அனைவரும், நீராடியபின் வேலைக்குச் செல்வதற்காக வீட்டை விட்டுக் கிளம்பும் போது அல்லது
புதிய முயற்சியிலோ பணியிலோ ஈடுபடுவதற்கு முன்பும் தங்களது நெற்றியில் உதியைப்
பூசிக்கொள்வதை ஒரு நியதியாகவே கொள்ளவேண்டும். ஒருதுளி உதியைத் தண்ணீரில் கரைத்து காலையில் அன்றாட தினத்தை துவக்குவதற்கான
முதல் வேலையாகவும், இரவில் கடைசி முறையாகவும் உதி என்ற தேனைப் பருகவேண்டும்.
★எவருக்காவது உடல் நலமின்றி ஆனாலோ அல்லது நோயுற்றிருந்தாலோ அவர்களை
நோயிலிருந்து விடுவிக்க பாபாவிடம் உண்மையாகப் பிரார்த்தித்துக் கொண்டு உதியை
தண்ணீரில் கலந்து கொடுக்கவேண்டும்.
★பாபாவின் உதியை பாபாவாகவே எண்ணி அதில் நம்பிக்கை கொள்ளுங்கள்...அவர் உங்களது
அனைத்து பொருள்சார்ந்த , உடல்சார்ந்த லௌகீகக் கஷ்டங்களையும் நீக்கி உங்களது நிகழ்காலத்தையும்
எதிர்காலத்தையும் ஒளியினாலும் சக்தியினாலும் நிரப்பிவிடுவார்.
★ பரமம் பவித்ரம் பாபா விபூதிம்
பரமம் விசித்ரம் லீலா விபூதிம்
பரமார்த்த இஷ்டார்த்த
மோக்ஷப்ரதானம்
பாபா விபூதிம் இதமாஷ்ரயாமி
No comments:
Post a Comment