எதெல்லாம் நமக்கு நடக்கவேண்டுமோ, அதெல்லாம் அதன் வழி நடக்கட்டும். ஆனால், நம்முடைய இவ்வாழ்வு பாபாவை பற்றிய
சிந்தனையில்தான் முழுமையாக எந்நேரமும் இருக்கவேண்டும். அப்படியிருப்பின், விதியால் நிர்ணயிக்கப்பட்ட
விபத்துக்களும், இன்னல் தரும் நிகழ்ச்சிகளும் நம்மை விட்டு பூரணமாக விலகும்.!
இளகிய மனம் படைத்த சாயி, பக்தர்களின்
எண்ணங்களைக் கண்டு அவர்களுடைய நம்பிக்கையை (பக்தியை) பாராட்டும் வண்ணம், ஒன்றன்பின் ஒன்றாகச் சீரிய
அனுபவங்களை அளிக்கிறார்.
பாபாவின் திருவாய் மூலம் உதிர்ந்த கதைகளைக் கேட்க வேண்டும். ஆராய்ச்சிக்கு
அப்பாற்பட்ட அவருடைய லீலைகளை அனுபவிக்க வேண்டும். எத்தனை லீலைகளைச் சேகரிக்க முடியுமோ, அத்தனையையும் சேகரித்து
மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டும்.
சாயியின் அற்புதமான சரித்திரத்தை பக்தியுடன் கேட்கப்பட்டால்,
எடுத்துச் சொல்பவர்,
கேட்பவர்கள்,
இவர்களுடைய எல்லா இன்னல்களும், துயரங்களும் ஒழிந்துபோகும்.
ஓம் சாய் ராம்
No comments:
Post a Comment