Sunday, June 1, 2014

நான் இறைவனுடைய அடிமை!

 25124



 'நான்இறைவன்’  என்று அவர் ஒரு பொழுதும் சொன்னதில்லை. 'நான் இறைவனுடைய அடிமை’  என்றும் 'நான் இறைவனை எப்பொழுதும் மனத்தில் இருத்திக் கொண்டிருக்கும் ஏழை’  என்பவற்றைத்தான்  சொல்லி­க் கொண்டிருந்தார்.  'அல்லாமா­க், அல்லாமா­க்” (அல்லாவே எஜமானர்) என்று சதா ஜபம் செய்து கொண்டிருந்தார். 



 எந்த ஞானியையும் ஜாதியை வைத்தோ, உணவுப் பழக்க வழக்கங்களாலோ, மற்ற நடைமுறைச் செயல்களாலோ, எடை போட முடியாது. ஞானிகளுடைய நிலைமை இதற்கெல்லாம் அப்பாற்பட்டது. 

ஜடமான ஜீவர்களைக் கைதூக்கி விடுவதற்காகப் பரோபகாரமே உருவான ஞானிகள் அவதாரம் செய்கின்றனர். இது, எல்லாம் வல்ல இறைவனின் கருணையால் நிகழ்கிறது. 



 பூர்வ ஜன்ம புண்ணியம் இருந்தால்தான் ஞானிகளின் சரித்திரத்தைக் கேட்க வேண்டுமென்ற ஆவல் எழும். அதன் விளைவாக, மகிழ்ச்சியும் சுகமும் லாபமாகும். 

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...