வீட்டு விவகாரங்களில் ஒத்துழைப்புக்கொடுக்கும் தனலட்சுமி எனக்கு உடன் பிறவாத சகோதரி. நான் சீரடி சென்று வந்த பிறகு, அவரிடம் என் அனுபவங்களைக்கூறினேன். என்னை அழைத்ததைப் போல பாபா அவரையும் அழைத்தார். சீரடி சென்று பாபாவை தரிசித்துவந்தாள்.
அவரது மகன் விஜய் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு அனுப்பப்பட்டான். பரிசோதித்துப் பார்த்து கிட்னியில் புண் இருப்பதாகவும், ஈரல் கெட்டுவிட்டதாகவும் கூறினார்கள்.
மனம் உடைந்துபோனவர்களாக பாபாவிடம் தனலட்சுமியும், அவரது கணவர் குணாவும் மனமுருக வேண்டினார்கள். மிகச் சிரமப்பட்டு அறுபத்தையாயிரம் ரூபாய் வரை செலவு செய்தும் குணம் கிடைக்கவில்லை. இந்த நிலையில் வேறு ஒரு மருத்துவரை அணுகியபோது, இவனுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை, வெறும் சத்துக் குறைவுதான், ஊட்டச்சத்து கொடுங்கள் எனக் கூறி அனுப்பினார்கள்.
குடும்பப் பொறுப்பு இல்லாமல் அதுவரை மதுப்பழக்கத்திற்கு ஆளாகியிருந்த குணா, பாபாவிடம் வேண்டி வேண்டி அந்தப் பழக்கத்தை விட்டுவிட்டார். இப்போது அந்தக் குடும்பம் பாபாவை உயிராக வணங்குகிறது.
உடல்நலம் சரியில்லாததால் விஜய் படிப்பை தொடர முடியாமல் இருந்தான். இப்போது அவனை இப்போது நாங்கள் ஒன்று சேர்ந்து ஒரு டிப்ளமோ கோர்சில் சேர்த்து விட்டிருக்கிறோம்.
குணா குடும்பத்தை கவனிக்காததால், தன லட்சுமி சீட்டுப் பிடித்தாள். அதில் லாபம் இல்லை, மன உளைச்சல்தான் மிச்சமாக இருந்தது. இப்போது அதையும் விட்டுவிட்டு, கடவுள் கொடுப்பதை வைத்து திருப்தியாக வாழ்கிறார்கள்.
நம்பியவர்களுக்கு கடவுள் கைகொடுப்பார் என்பதற்கு தனலட்சுமி, குணா தம்பதியர் வாழ்வு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறது.
அமுதா,
அயனாவரம், சென்னை-23
No comments:
Post a Comment