Wednesday, June 4, 2014

பாபாவின் அறிவுரை

20142

நீங்கள் எங்கு வேண்டுமானாலும் இருங்கள், என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால், இதை நன்றாக ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் செய்வது அனைத்தும் எனக்குத்தெரியும். நானே அந்தரங்க ஆட்சியாளன். இதயத்தில் அமர்ந்து இருக்கிறேன். எல்லா ஜீவராசிகளையும் அரவணைக்கிறேன்.

பிரபஞ்சத்தை நானே கட்டுப்படுத்துவன், ஆட்டுவிப்பவன், முக் குணங்களின் கூட்டுறவும் நானே.

நானே எல்லா உணர்ச்சிகளையும் உந்துபவன், படைப்பவன், காப்பவன், அழிப்பவன். என் பால் கவனத்தை திருப்புபவனை எந்த துன்பமும் நெருங்காது,

மாயை என்னை மறந்தவனை ஆட்டி உலுக்கும்.

இத்தகைய அழகான, விலை மதிப்பற்ற அமுத மொழிகளையும், அறிவுரைகளையும் நோக்கும் போதும், கேட்கும்போதும் நாம் சதா காலமும் சாயி சாயி என்று சொல்லி வந்தாலே எல்லா துன்பங்களும் பறந்தோடி மனம் அமைதியுறும்.

மேலும், எப்போதும் நல்லதையே எண்ணி செயல்படுகிற மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும். அன்பு உள்ளத்தில் ஊற்றெடுக்க வேண்டும். எங்கும் எதிலும் கடவுளின் அருட்காட்சியை காண முயலவேண்டும். நாம் முன்னேறுவதற்காகவே இப்பூமியில் பிறந்திருக்கிறோம்.

ஒவ்வொரு நிமிடமும் நாம் முன்னேறாவிட்டால் வாழ்க்கையே சுவாரஸ்யமற்றதாகிவிடும். எந்த நிலையிலும் நாம் கடவுளிடம் உதவியைப் பெற கற்றுக்கொள்ள வேண்டும். அது பல அற்புதங்களை நிகழ்த்திக் கொண்டேயிருக்கும்.

நமது தேவைகள் அனைத்தையும் கடவுள் நிறைவேற்றுவார். நமது பலவீனத்தைப் போக்கி நல்வழிப்படுத்தும் ஆற்றல் கடவுளுக்கு மட்டுமே உள்ளது. எனவே, நமது கடவுளான, சத்குருவினை, நமக்கு எல்லாமுமான சாயிநாதனை மனதார பிரார்த்திப்போம். பிறந்த பயனை அடைவோம்.

சாயி கலியன்

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...