உங்கள் பிரார்த்தனை கேட்கப்படாதபோது எப்படி உணர்வீர்கள்?
(கே.என். கார்த்திக், சென்னை-40)
எனது மகன் என்னிடம் ஒரு பொருளைக்கேட்டான், வாங்கித் தந்தேன். மறுநாள் வேறு ஒரு நண்பரிடம் கொடுத்து அதை பாழாக்கிவிட்டான். கேட்டபோது, பரவாயில்லை விடுங்கள்.. தவறு நடந்துவிட்டது என்றான். அவன் சம்பாதிக்கும் போது இந்தப் பொருளை வாங்கியிருந்தால் அதன் மதிப்பு அவனுக்குத் தெரிந்திருக்கும் என நொந்து கொண்டேன்.
இப்படித்தான் பாபாவும், பிரார்த்தனையின் பலனுக்கு என ஒரு முக்கியத்துவம் மரியாதை இருக்கிறது. அதை உணராதவர்களுக்குக் கொடுத்தால் சிரமம் என்பதை உணர்ந்து தரமாட்டார். சில சமயம், இப்போது வேண்டாம் என நினைப்பார். எனக்காகப் பிரார்த்தனை வைத்துக் கேட்கப்படாவிட்டால், பாபா என்ன காரணத்தாலோ தள்ளி வைத்திருக்கிறார் என நினைப்பேன். பிறருக்காகப் பிரார்த்தனை செய்து அது கேட்கப்படாவிட்டால், என்ன பாவம் செய்தேனோ, இவர்கள் பிரார்த்தனை கேட்கப்படவில்லையே! இறைவா, என் பக்திக்கு அடையாளமாக இல்லாவிட்டாலும், உனது கருணைக்கு அடையாளமாக இந்த உதவியை அவர்களுக்குச் செய் என வேண்டுவேன். சில நேரம் அது கதறலாக மாறுவதும் உண்டு. நாம் என்ன செய்தாலும், கருணை காட்ட வேண்டியது நமது பாபாதானே!
No comments:
Post a Comment