பாபாவை எவ்வளவுதான் வழிபட்டாலும் ஏதோ வாழ்கிறோம் என்ற அளவில்தான் வாழ்க்கைப்போகிறதே தவிர, கஷ்டம் தொலையவில்லை. கைத் தொழிலும் சிறக்கவில்லை. என்ன செய்வது என்று தெரியில்லை, வழி கூறுங்கள்.
( சி. நாகமணி, உத்திரமேரூர்)
பலருடைய பிரச்சினை இப்படித்தான் உள்ளது. நிறைய பேர் முயற்சி எடுத்து உழைக்காமலும், உழைப்புக்கு வழி செய்யாமலும், கிடைக்காத ஒன்றை எதிர்பார்த்து நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள். உதாரணமாக, ரியல் எஸ்டேட்டில் தரகு வியாபாரம் செய்கிறவர்கள். இதை முடித்தால் இவ்வளவு கிடைக்கும் என அலையாய் அலைந்து தேடித் திரிவார்கள். பெரிய கமிஷன் கிடைக்கும் என விற்பனையாளரையும், வாங்குவோரையும் கண்டுபிடித்து ஒன்றாகச் சேர்ப்பார்கள். நிலைமை எப்படியாகும் என்றால், சிறிய தொகையாக இருக்கும்வரை கமிஷன் தந்து வந்தவர்கள், பெரிய தொகையாக வரும்போது, இவர்களை எப்படி துண்டிக்கலாம் என வழி பார்ப்பார்கள். இப்படி பலரது வர்த்தகம் முடிந்து போகும்.
இதையே நம்பி மற்ற வேலைக்குப் போகாமலும், இருக்கிற வேலையைப் பார்க்காமலும் உள்ள நபர்களின் எண்ணிக்கை அதிகம். இவர்கள் பாபாவிடம் வந்து எனக்கு அதைச் செய் பாபா, இதைச் செய் பாபா என வேண்டுவார்கள். நடக்காத பட்சத்தில், நான் ஆத்மார்த்தமாகத்தான் வேண்டிக்கொண்டிருந்தேன். ஆனால் இந்த பாபா என்னை கைவிட்டுவிட்டார் என்பார்கள். ஆத்மார்த்தம் என்பது என்ன? எதையும் எதிர்பார்க்காமல் பக்தி செய்வதுதானே.
சித்தத்தை ஒருமுனைப் படுத்தி, என்னால் ஜெயிக்கமுடியும் என்ற உறுதியோடு, நேரம் காலம் பார்க்காமல் உழைத்துப் பாருங்கள், நிச்சயம் வாழ்க்கை உயரும்.
No comments:
Post a Comment