Wednesday, June 4, 2014

பாபா ஒருபோதும் கைவிட மாட்டார்!

25125

சத்சரித்திரம் 13 வது அத்தியாயத்தில், பாபா,  ‘நன்றியுள்ள நினைப்பு, மாறாத நம்பிக்கை, பக்தி இவற்றைத் தவிர வேறு எதையும் எதிர்பார்க்கவில்லை!’  என்று எழுதப்பட்டிருக்கிறது.

அப்படியானால் பாபா நன்றியுள்ள நினைப்பை, மாறாத நம்பிக்கையை, பக்தியை நம்மிடமிருந்து எதிர்பார்க்கிறார் என்று அர்த்தம் அல்லவா?

இந்த மூன்று விஷயங்களில் தான் ஒருவரது வாழ்க்கையே அடங்கியிருக்கிறது. இதை உங்களில் எத்தனை பேர் சிந்தித்துப் பார்த்திருக்கிறீர்கள்? இப்போது பார்க்கலாம்.

நன்றியுள்ள நினைப்பு

காலத்தால் செய்த நன்றி சிறிது எனினும், செய்யப்பட்ட காலத்தோடு ஒப்பிட்டுப்பார்த்தால் இந்த உலகத்தை விடபெரியது. அதனால், வேறு எந்த வித நன்றியை மறந்தாலும் தப்பித்துக் கொள்ளலாம், செய் நன்றியை மறந்தவர்களுக்கு கதி மோட்சமே கிடையாது என்கிறது திருக்குறள்.

பாபா நம்மிடம் நன்றியுள்ள நினைப்பை எதிர்பார்க்கிறார் என்றால், ஏற்கனவே ஏதாவது நமக்கு செய்திருக்க வேண்டும் அல்லவா? எதையும் செய்யாமல் எப்படி நன்றியை நம்மிடமிருந்து அவர் எதிர்பார்க்கமுடியும்?

பீமாஜி பாடீல்என்றபக்தர்காசநோய்முற்றி, இரத்தவாந்திஎடுத்தார். அவரை, மருத்துவர்கள் கைவிட்டார்கள். மந்திரதந்திரங்கள்கைவிட்டன. குலதெய்வம், இஷ்டதெய்வம்உட்படஅவர் வணங்கியதெய்வங்கள்அனைத்தும்கைவிட்டன. வேறுவழியின்றிமரணத்தைஎதிர்நோக்கிக்காத்திருந்தார்.

உயிரைவிடும்போதுகூட, இன்னொருநாள் வாழக்கூடியவாய்ப்புகிடைக்காதாஎன்றுதான் நாம் அனைவருமேநினைப்போம். பீமாஜிபாடீலுக்கும் இந்தநினைப்புஇருந்தது. அதனால்தான் அவரும் எத்தனையோவழிகளில்முயன்று கொண்டிருந்தார்.

யாரோசொன்னார்கள்: ’சீரடியில்பாபாவிடம் சென்றால், உடனடியாககுணமடைந்துவிடுவாய் என்று!’  உடனடியாக, பாபாவின்பக்தரானசாமா நினைவுவந்து, அவருக்குக்கடிதம்எழுதி, அவர் மூலமாகவேசாயிதரிசனம்செய்தார்பீமாஜி.

பாபாவின்தரிசனமும், அவரிடம்பீமாஜி வைத்த வேண்டுதலும்உடனேபலித்தன. மரணத்திலிருந்துவிடுபெற்றார். நலமடைந்தார். பாபாசெய்த இந்தநன்மையைநன்றியோடுநினைத்து, அடிக்கடி சீரடிக்குவந்துசென்றார். அவர்தான்கொடி ஊர்வலம், சாயிசத்யவிரதபூஜை  போன்றவற்றை பாபாவுக்காகச்செய்தவர்.

பீமாஜிக்குசெய்ததுபோலநமக்குஏதாவது பாபாசெய்திருந்தால், நாமும்நன்றியோடுபாபாவை நினைக்கலாம். அவர்தான்நமக்கு எதையும்செய்யவில்லையே!  பிறகு எப்படிநினைப்பது? எனநீங்கள்நினைக்கலாம்.

உங்களுக்குகஷ்டகாலம்முடிந்துவிட்டது, புண்ணியம்சேர்ந்திருக்கிறது, பாவம்விலக்கப்பட்டுள்ளது. அதனால்நீங்கள்சாயிவழிபாட்டை செய்கிறீர்கள். இதைத்தெரிவிப்பதேநன்மையான விஷயம். கஷ்டகாலம்முடிந்தபிறகும்கஷ்டப்படுவானேன்? புண்ணியம்சேர்ந்தபிறகு அனைத்தும்நன்மையாகவேநடக்கப்போகிறது..நடக்கும்முன்வருத்தப்படுவானேன்..

நீங்கள்நினைக்கும்போதுதரிசனம்தருகிறார்..கேட்டதைகொடுத்து,தான்உங்களோடுஇருப்பதை உறுதிசெய்கிறார்.. சீரடிக்குக்கூப்பிடுகிறார்..பக்கத்தில்அவர்எழுந்தருளியிருக்கிறகோயிலுக்கு அழைக்கிறார்.. இதனாலெல்லாம்அவரை நன்றியோடுநினைக்கவேண்டும். இதைஅவர் எதிர்பார்க்கிறார்.

பெருங்களத்தூர்பிரார்த்தனைமையம்வந்து கோரிக்கைநிறைவேறிச்சென்றவர்களைஅதன் பின்னர் பல ஆண்டுகளாக  பார்க்கமுடியாது.. அடுத்தகஷ்டம்வரும் போதுதானாகவருவார்கள்.. தங்களைஅறிமுகப்படுத்திக்கொள்வார்கள்.. இப்படியிருக்கக்கூடாது..உனக்குநன்மைநடந்தஇடத்தைமறக்கலாமா? மறக்காமல்நினைக்கவேண்டும்எனபாபா எதிர்பார்க்கிறார்.

மாறாதநம்பிக்கை

நம்பிக்கைஇல்லாதவர்களுக்குகடவுள் அற்புதத்தைச்செய்வதேஇல்லை. நம்பிக்கையில்லாதவர்கள்கடவுளிடமிருந்துஅற்புதத்தைப்பெறஇயலுவதில்லைஎன்றும்கூறலாம். எவ்வளவு பெரியகஷ்டமாகஇருந்தாலும்கடவுள்மீது நம்பிக்கைவைக்கும்போது, அவர்நமக்கு மிகப்பெரிய தன்னம்பிக்கையைத்தருகிறார்.

’பொறு, உன்னுடையகவலைகளைதூரஎறி, உன்னுடையதுன்பங்கள்ஒருமுடிவுக்குவந்துவிட்டன. ஒருவன்எவ்வளவுதான்நசுக்கப்பட்டவனாகஇருந்தாலும், இம்மசூதியில்கால்வைத்தவுடனேமகிழ்ச்சியின்பாதையில்செல்கிறான்.

இங்கேயுள்ளபக்கிரிமிகவும்அன்பானவர். இவர் இவ்வியாதியைக்குணப்படுத்துவார். அன்புடனும், ஆசையுடனும்எல்லோரையும்பாதுகாப்பார்..என்று, பக்தனுக்குபாபாதன்னம்பிக்கைதருவார்.

பலவேளைகளில்நமதுநம்பிக்கைஆட்டம் காணும்அளவுக்குப்பிரச்சினைகள்அதிகமாகும்.

நம்பிக்கையேபோய்விடும். வேறுஎங்காவதுபோய்பார்க்கலாமா? எனஎண்ணத்தோன்றும். இப்படி அடிக்கடிமனம்மாறுகிறாயா? தன்னம்பிக்கை இழக்கிறாயா? அல்லதுவருவதுவரட்டும், பாபா தான்என்னோடுஇருக்கிறாரே! எனதைரியமாக இருக்கிறாயா? என்பதைஅவர்கவனிப்பார். என்ன செய்யப்போகிறாய்எனவேடிக்கைப்பார்ப்பார்.

ஒருமுறைஉன்னைகாப்பதாகச்சொல்லி விட்டு, பிறகுமறுப்பதற்குஅவர்மனிதன்அல்ல, கடவுள். அவர்சொன்னால்நடக்கும்.. சொன்னதை மாற்றமாட்டார்.

பின்னர்ஏன்எனக்குநடக்கமாட்டேன்என்கிறது? என்றால், இறுதிவரைநம்பிக்கையில்நிலைத்து நிற்பவனுக்குத்தான்வெற்றியைத்தருவார். நான் நம்புகிறேன்என்றுநீசொல்லலாம், ஆனால், கடைசிவரைநீநம்பமாட்டாய்என்பதுகடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம்ஆகியவற்றை நன்றாகஅறிந்தபாபாவுக்குத்தெரியாதா?

கிணற்றில்போட்டகல்மாதிரி.. அவர்மீது பாரத்தைப்போட்டுவிட்டு, பாதத்தைப்பிடித்துக் கொண்டுஉட்கார்ந்துவிட்டால்போதும்.. நாம் கேட்பதைஅப்படியேசெய்யாமல், நமக்குஎது நன்மையோஅதைச்செய்வார்.. இதைச்செய்யும் முன்புநீஅவரைமுழுமையாகநம்பவேண்டும் எனஎதிர்பார்க்கிறார்.

இதற்குஉன்னிடம்தைரியம்இருக்கவேண்டும்.. சோதனைவரும்போதுவேதனைப்பட்டாலும், நம்பிக்கையைஇழக்காமல்சகிக்கவேண்டும்.

முழுமையானபக்தி

நிறையபேர், நான்பாபாவின்பக்தன்என்று சொல்லிக்கொள்வார்கள். பக்தனுக்குஉரிய இலக்கணம், அன்புடனும், ஆசையுடனும்அவரை நேசிக்கவேண்டும். இதுதான்பிரேமைஎனப்படுகிறது. எல்லாவற்றையும்நேசிக்கிறேன்,

உன்னையும்நேசிக்கிறேன்என்றால், அவர் ஒப்புக்கொள்ளமாட்டார்.. நீஎன்னைநேசி, நான் உனக்குள்ளஅனைத்தையும்நேசிக்கிறேன்என்பார்.

அன்புஎன்பதுஎதையும்எதிர்பாராமல்வருவது, தன்னைத்தியாகம்செய்வது, தனக்குக்கிடைப்பதைஒளிக்காமல்தருவது, எப்போதும்தன் அன்புக்குரியவர்நினைவாகவேஇருப்பது.. அவரை நினைத்தவுடனேகண்களில்நீர்வைப்பது..சுயநலமில்லாமல்இருப்பது..இதெல்லாம்தான் அன்புஎனப்படுகிறது..

பாபாமீதுஇப்படியாஅன்புசெலுத்துகிறோம்?

பாபாஎனக்குஅதைக்கொடு.. இதைக்கொடு எனக்கேட்டு, அதைப்பெறுவதற்காகஅவர்மீது நம்பிக்கைவைக்கிறோம்.. நம்பிக்கைவைத்து தனக்குகிடைக்கும்எனக்காத்திருக்கிறவன் விசுவாசி.. அவன்பக்தன்கிடையாது. நாமெல்லோரும்விசுவாசியாகஇருக்கிறோமே தவிர, பக்தராகஇருப்பதில்லை.

ஆனால், நம்மைபக்தராகமாற்றுவதற்குபாபா சொன்னஉபாயம், ”நீஎப்போதும்சாயிசாயிஎன்று சொல்லிக்கொண்டிரு. எனக்குபலவிதமான வழிபாடுகள்கூடவேண்டாம், முழுமையானபக்தி மட்டும்செய்.. நான்உன்னோடுஇருந்து, உனது துன்பம்எத்தகையதாகஇருந்தாலும்சரி..அதிலிருந்துஉன்னைதூக்கிக்கொண்டுபோய் காப்பாற்றுவேன்..”

இதுவரைவிசுவாசியாக ! அவரைநம்புகிறவராக இருக்கிறநீங்கள், எல்லாம்அவரால்நடக்கிறது என்கிறபோது, எனக்கும்அவரால்நல்லதாகவே எல்லாம்நடக்கும்என்பதைத்தெளிவாகஅறிந்து, கவலைப்படாமல், தைரியமாகசாயிசாயிஎன்று சொல்லிக்கொண்டுபக்திசெய்யுங்கள். உங்கள் வாழ்க்கையில்ஏற்படுகிறமாற்றத்தைநீங்கள்வெகு விரைவில் உணர்வீர்கள்.

 

ஜெய் சாய்ராம்…..சரணம் சாய்ராம்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...