Sunday, June 15, 2014

ஏன்?

சந்நியாசிகள் மற்றும் பிரம்மச்சாரிகள் ஆகியோர் தமக்காக சமைக்கமாட்டார்களாமே, ஏன்?

(கல்பனா சேகர், காஞ்சீபுரம்)

பஞ்சமா பாவங்கள் வந்து சேரக்கூடாது என்ற அச்சத்தால் சமைக்கமாட்டார்கள். இதில் ஒரு சுய நலமும் உள்ளது. யாரோ இத்தகைய பாவத்தைச்செய்து சமைத்துப் பிட்சையாகப் போடுவார்கள்..



இவர்கள் பாவம் படாமல் சாப்பிடுவார்கள். பிறரை பாவம் செய்ய வைத்து சாப்பிடுகிற இந்த சுய நலத்துக்கும் தண்டனை உண்டு. அதனால் தான் சந்நியாசிகளாக திரிகிறார்கள்.



உடனடியாக பாபாவும் இப்படித்தானே பிட்சை ஏற்று உண்டார்? எனக் கேட்கலாம். பிட்சை ஏற்ற பாவத்திற்காகத்தான் அவர் உலகத்திலுள்ள அனைவருடைய பாவங்களையும் சுமக்க நேரிட்டு, இன்றளவும் தூக்கமில்லாமல், எல்லோருடைய வேண்டுதல்களையும் கேட்டுக்கேட்டு, அதை நிறைவேற்றுகிற ஏவலாளியாக இருக்கிறார். நாம் தப்பித்தோம்... பாவத்தை அவர் தலையில் சுமத்தி விட்டு ஜாலியாக இளைப்பாறுகிறோம்.



<

p style="text-align:justify;">

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...