Wednesday, June 11, 2014

பிரம்மத்தால் நிறைந்தவர்!

25129

பாபா ஏதும் உபவாசம் இருந்ததில்லை; ஹடயோகமும் பயின்றதில்லை. உணவில் ருசி தேடவில்லை; எப்பொழுதுமே சொல்பமான ஆஹாரத்தை ஏற்றுக்கொண்டு வாழ்ந்தார்.

குறிப்பிட்ட சில இல்லங்களுக்குச் சென்று, சோளரொட்டி (வெறும் ரொட்டியோ, பதார்த்தத்துடனோ) பிச்சை கேட்பார். இவ்வாறு எடுத்த மதுகரி (தேனீ பல பூக்களிலிருந்து உணவு தேடுவது போன்ற) பிச்சையே அவருடைய உணவாகியது. நாவின் சுவைக்கு அவர் இடம் கொடுக்கவேயில்லை.
நாவின் சுவைக்கு அவர் இடமே அளிக்காததால், அறுசுவைப் பண்டங்களுக்காக அவர் ஏங்கவில்லை. பிச்சை கிடைக்குமோ கிடைக்காதோ என்றோ, கிடைத்த உணவின் தரம் என்னவென்றோ அவர் கவலைப்படவில்லை. எது கிடைத்ததோ அதில் திருப்திகொண்டார்.

இவ்விதமாக, அவர் உயிர்பிழைத்திருப்பதற்காக உணவு கொண்டார். சரீரத்தை ஞானத்திற்கும் மோட்சத்திற்கும் உண்டான ஒரு சாதனமாகவே கண்டு ரட்சித்தார். சரீரத்தின்மீது அபிமானம் என்பது இல்லை.
ஆத்ம சாந்தியையே பூஷணமாக அணிந்தவருக்குக் கழுத்தைச் சுற்றி மாலையும் அணிகலன்களும் எதற்காக? உடலுக்குச் சந்தனமும் விபூதியும் பூசவேண்டிய அவசியமும் இல்லை. பிரம்மத்தால் (முழுமுதற்பொருள்) நிறைந்தவரல்லரோ ஸாயீ.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...