Friday, June 6, 2014

சாயியின் சத்சரித்திரத்திலிருந்து

sai-guide-us



சுவாரசியமான சாயியின் கதைகளைக் கேட்டால், குருவின் திருவாய்மொழி மனத்தில் ஆழமாகப் பதியும். கர்மம் எது? அகர்மம் எது? விகர்மம் எது? என்பதெல்லாம் புரியும். குருவின் பாதங்களிடத்து சிரத்தை வளரும்.
எளிமையான உபாயங்களிலேயே மிக எளிமையான உபாயம் ஸாயீயின் பாதங்களை இதயத்தில் நிறுத்துவதுதான். மாயையை ஒழிக்கும் ஒரே வழி இதுவே; புகலிடமும் இதுவே.



மாயையின் சுழல் ஏற்படுத்தும் சம்சார பயம் கொடிது. சாயியின் கதைகளைக் கேட்பதால், மாயை தவிடு பொடியாகி அகண்டமான (இடையறாத) ஆனந்தம் விளையும்.
ஒரு சமயம் சிர்டீயைக் காலரா கொள்ளைநோய் தாக்கியது. மக்கள் பயந்துபோனார்கள். வெளிமனிதர்கள் யாரையும் கிராமத்துள் அனுமதிக்கக்கூடாது என்று ஏகமனதாக முடிவெடுத்தனர். தமுக்கடித்துச் செய்தியும் பரப்பப்பட்டது.
காலராவைக் கண்ட சிர்டீ வாழ் மக்கள் மரணபீதி அடைந்தனர். கொள்ளை நோய் விலகும்வரை வெளிமனிதர்களிடம் எந்த உறவும் வைத்துக்கொள்ள விரும்பவில்லை. வர்த்தகமும் போக்குவரத்தும் செய்தித்தொடர்பும் உறைந்துபோயின.
காலரா நோய் இருக்கும்வரை எவரும் ஆடு வெட்டக்கூடாது. வெளியி¬ருந்து கிராம எல்லையைத் தாண்டி வண்டி ஏதும் ஊருக்குள் வரக்கூடாது. அனைவரும் இந்த விதிகளைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டுமென்று எதிர்பார்க்கப்பட்டது.



பாபாவுக்கோ கிராம மக்களின் இம் மூடநம்பிக்கையில் ஒப்புதல் இல்லை. இம் மூடநம்பிக்கைகள் மக்களுடைய அஞ்ஞானத்தைப் பிரதிப¬க்கின்றன என பாபா அபிப்பிராயப்பட்டார்.



ஆகவே, ஒரு பக்கம் கிராம மக்கள் சட்டதிட்டங்களை விதித்திருந்தபோது, மறுபக்கம் பாபா அவற்றை உடைத்துக்கொண் டிருந்தார். எப்படியெல்லாம் உடைத்தார் என்பதுபற்றி கவனமாகக் கேளுங்கள்.
கிராமப் பஞ்சாயத்து விதித்த சட்டதிட்டங்களை மக்கள் நேர்மையுடன் அனுசரித்தனர். யாரேனும் சிறிதளவு மீறினாலும், அபராதம் கட்டிய பிறகே விடுவிக்கப்படுவார்.



பாபாவுக்கோ அபராதம் பற்றிய பயமேதுமில்லை. அவர் சதாசர்வகாலமும் நிர்ப்பயமாக இருந்தார். ஹரியின் பாதங்களில் லயித்துவிட்ட மனத்தை எவராலும் எக்காலத்தும் வெல்லமுடியாது அல்லவா?
இந்த சமயத்தில், விறகுகள் ஏற்றப்பட்ட பாரவண்டியொன்று கிராமத்தின் எல்லையைக் கடந்து உள்ளே வந்தது. இது பிரச்சினையைக் கிளப்பியது; ஜனங்கள் வாக்குவாதம் செய்தனர்.



கிராமத்தில் எரிபொருளுக்குப் பஞ்சம் இருந்தது என்பது கிராம மக்களுக்குத் தெரிந்திருந்தது. ஆயினும், காலரா காலத்தில் பஞ்சாயத்து இட்ட கட்டுப்பாட்டை எங்ஙனம் மீறுவது? மக்கள் செய்வதறியாது விழித்தனர்.
வண்டியோட்டியை மிரட்டி வண்டியைத் திருப்பியனுப்பிவிட முயன்றனர். செய்தி பாபாவை எட்டியது; உடனே பாபா அவ்விடத்திற்கு விரைந்தார்.
பாபா வண்டியின் முன்னே சென்று நின்றார். இதைக் கண்டவுடன் வண்டியோட்டியின் தைரியம் மேலோங்கியது; கிராம மக்களின் எதிர்ப்பு உடைந்தது. விறகுவண்டி எல்லையைத் தாண்டி சிர்டீக்குள் நுழைந்தது.
வண்டியை அங்கிருந்து நேராக மசூதியின் சபாமண்டபத்திற்கு ஓட்டி விறகை அங்கு இறக்கிவிடும்படி சொன்னார் பாபா. எவரும் ஒரு வார்த்தையும் பேசவில்லை.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...