Wednesday, June 11, 2014

ஜென் கதை

13307992-zen-basalt-stones-and-bamboo-on-the-wood

ஸெங்காய் என்னும் ஜென் குருவிடம் குடும்பத்தோடு போய் ஆசி வேண்டினான் ஓர் அரசன். உன் தந்தை இறப்பார், நீ இறப்பாய், உன் மகன் இறப்பான், உன் பேரக்குழந்தை இறக்கும்" என்று ‘ஆசி’ வழங்கினாராம் அந்த ஞானி.
மனம் நொந்துபோன அரசன் நல்ல வார்த்தையாகச் சொல்லக் கூடாதா?" என்று கேட்டபோது, இதை விடச் சிறந்த ஆசிர்வாதம் வேறு என்ன இருக்க முடியும்?" என்று வேறு அவர் கேட்டாராம்.
இந்த ஜென் கதையை மேலோட்டமாகப் பார்த்தால் உண்மையான பொருளைப் புரிந்து கொள்வது சிரமம். சத்குரு ஜக்கி வாசுதேவ் இதற்கு அழகான விளக்கம் தருகிறார். பிறப்பு நேர்ந்த பிறகு மரணம் என்பது எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்பது நியதி. ‘மரணத்தைத் தவிர்க்க முடியுமா என்ற கவனத்திலேயே வாழ்பவர்கள் உண்மையில் வாழும் கணங்களையே உண்மையாக வாழாமல் வாழ்க்கையையே தவிர்த்தவர்களாகி விடுகிறார்கள்’ என்கிறார் சத்குரு.
தலைமுறை தலைமுறையாகத் தகப்பன், மகன், பேரன் என்ற இயல்பான வரிசையில் மரணம் வரட்டும் என்பதே ஜென் குருவின் ஆசி. அந்த வரிசை தவறி முன்பின்னாக மரணம் நேர்ந்தால் அதுதான் சோகம் என்பதையும் எடுத்துச் சொல்கிறார்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...