நாம் ஸாயீயை ஓர் அவதார புருஷராக ஏற்றுக்கொள்ளலாம். ஏனெனில், அவரிடம் அவதார புருஷருக்குரிய லட்சணங்கள் அனைத்தும் உண்டு. ஆனால், அவரோ, 'நான் அல்லாவின் உடுப்புத் தலைப்பில் கட்டப்பட்டவன்’ என்றே சொல்லி¬க்கொண்டார்.
அவதார புருஷராக இருந்தபோதிலும், உலக நியமங்களுக்குக் கட்டுப்பட்டே வாழ்க்கை நடத்தினார். வர்ணாசிரம தர்மத்தின்படி தூய வாழ்க்கை நடத்தும்படி பக்தர்களுக்கு போதித்தார்.
அவர் யாரோடும் எவ்விதத்திலும் போட்டியிட்டதேயில்லை; மற்றவர்களையும் போட்டியிட ஊக்குவித்ததில்லை. இவ்வுலகில் இயங்கும் இயங்காப் பொருட்கள் அனைத்திலும் இறைவனைக் கண்ட அவர், அடக்கமும் பணிவும் உருவானவர்.
அவர் யாரையும் இகழ்ந்து பேசியதில்லை; எவரையும் துச்சமாகக் கருதியதில்லை. எல்லா உயிர்களிலும் இப் பிரபஞ்சத்தின் உணர்வான நாராயணனையே கண்டார்.
சாயி சத்சரித்திரத்திலிருந்து
No comments:
Post a Comment