Thursday, May 15, 2014

பயப்படாதே! இது நல்ல சகுனம்…

Image

 

என் பெயர்  வித்யா. சென்னையில் வசிக்கிறேன். என் வாழ்வில் 1996ம் ஆண்டு ஒரு மிக பயங்கரமான நிகழ்ச்சியை சந்தித்தேன். அப்போது எனக்கு வயது 15. பத்தாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தேன்.
சில நாட்களாக உடல்நிலை சரியில்லாததால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டேன். உடனடியாக என்னைப் பரிசோதித்த மருத்துவர்கள், ஸ்கேன் செய்யச் சொன்னார்கள்.
பார்த்ததில், சினைப்பையில் பெரிய அளவில் கட்டியிருப்பதாகவும், அதை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் கூறினார்கள். அறுவை செய்து கட்டியை பயாப்சிக்கு அனுப்பினார்கள். அதில் எனக்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. என் பெற்றோருக்கு இது தலையில் இடி விழுந்த மாதிரி இருந்தது. அதோடு மட்டுமில்லாமல் என்னுடைய சினைப்பையை அகற்றிவிட வேண்டும் என்று கூறினார்கள்.
கட்டி பெரிய அளவில் இருந்ததால் சிறுநீர் கழிக்கக்கூட முடியாமல் அவதிப்பட்டேன். பெற்றோருக்கு ஒரே பெண்.
டாக்டர்கள், ”உங்களுக்கு உங்கள் குழந்தை வேண்டுமா? அல்லது உங்கள் குழந்தைக்கு குழந்தை வேண்டுமா?” என்றார்கள்.
என் பெற்றோர், ”எங்கள் குழந்தை உயிருடன் கிடைத்தால் போதும்!” என்றதால், என் சினைப் பை அகற்றப்பட்டு, கீமோதெரபி உட்பட சிகிச்சை நடைபெற்றது.
என் உடலில் செல் எண்ணிக்கைக் குறைந்து மிகவும் மோசமான உடல்நிலையில் இருந்தேன். அப்பொழுதுதான் ஒருநாள் என் அம்மா மைலாப்பூர் பாபா கோயிலுக்குச் சென்றார்.
எனது நிலையை நினைத்து மனம் நொந்து பாபா முன் கதறி அழுதார்கள். அப்போது அர்ச்சனை செய்தபோது, தேங்காயில் பூ ஒன்று வந்தது. அம்மா ஒன்றும் புரியாமல் தவிக்க, பக்கத்திலிருந்த ஓர் அம்மா, “ஒன்றும் பயப்படாதீர்கள், இது நல்ல சகுனம். பாபாவிடமிருந்து வந்துள்ளது. உங்கள் மகள் விரைந்து குணம் அடைவாள்” என்று கூறினார்.
அப்போதுதான் பாபாவின் அறிமுகம் அம்மாவுக்கு. மிகவும் சந்தோசமடைந்து மருத்துவமனை வந்தார். அன்று முதல் என் உடல் நிலை தேறியது. அந்த வருடம் எனது பத்தாவது வகுப்புத்தேர்வு. நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றேன். தொடர்ந்து மேற்க்கல்வி பயின்றேன்.
என் பெற்றோர், அனைத்து சொத்துக்களையும் இழந்து எனக்கும், எனது படிப்பிற்கும் செலவு செய்துகொண்டிருந்தனர்.
நான் படிப்படியாக பாபாவின் ஆசியாலும், எனது குல தெய்வத்தின் அருளாலும் வாழ்க்கையில் முன்னேறினேன்.
எனது எல்லா பிரச்சினையும் தெரிந்து என்னைப் புரிந்து கொண்ட ஒரு நல்ல மனிதரை எனக்குக் கணவராகத் தந்து என்னை ஆசீர்வாதம் செய்திருக்கிறார் என் ஸ்வாமி, என் பாபா.
நான் எம்என்சியில் நல்ல உத்தியோகத்தில் இருக்கிறேன். நாங்கள் இழந்த செல்வங்களையெல்லாம் எங்களுக்குப்பலமடங்கு திருப்பிக் கொடுத்தார். எனக்குக் குழந்தை மட்டும் பெற முடியாது என்று டாக்டர்களே கூறியிருக்கிறார்கள்.
நான் அதனால் கவலை கொள்ளவில்லை. பாபாவுக்கு அனந்தகோடி நமஸ்காரங்களைச் செய்கிறேன். கண்டிப்பாக எனக்கு ஒரு குழந்தையை எப்படியாவது எந்த வகையிலாவது தருவார் என திடமாக நம்புகிறேன்.
நான் பாபாவிடம் வேண்டுவதெல்லாம் இவைதான்:
எனக்கு எந்த வியாதியும் இல்லாமல் நீங்கள் தான் பார்த்துக்கொள்ள வேண்டும். என் பெற்றோரையும், கணவரையும் நல்லபடியாக கவனித்துக் கொள்ள வேண்டும். எனக்கு தீர்க்காயுசையும், திட ஆரோக்கியத்தையும் தந்து, நிறைய நல்ல காரியங்களைச் செய்ய என்னை ஆளாக்கிக்கொள்ள வேண்டும் என்பதுதான்.



அனுபவப் பகிர்வு
வித்யா, சென்னை - 4



 

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...