என்னிடம் வேறு ஒன்றிலும் நாட்டமில்லாது சரணடைந்து என்னையே எப்போதும் எவர் நினைத்துக் கொண்டிருக்கிறாரோ, அவரது கடனை எனது தலையில் ஏற்றிக்கொள்கிறேன்.
அவரை கைதூக்கி விடுவதன் மூலம் அக்கடனைத் திருப்பிச் செலுத்துகிறேன். எவர் எனக்கு முதலில் சமர்ப்பணம் செய்யாமல் உணவு உண்பதில்லையோ - பானங்கள் அருந்துவது இல்லையோ, எவர் என்னை திரும்பத் திரும்ப நினைக்கிறாரோ, அவருடைய வசத்தில் நான் வாழ்கிறேன்.
எவர் எனக்குப் பின்னரே பசியாறி தாகம் தீர்த்துக்கொள்கிறாரோ, எவர் எனக்கு சமானமானவர் என்று எவரையும் அறியமாட்டாரோ, அவரையே நான் எப்போதும் தியானத்தில் வைக்கிறேன். நான் அவருடைய வசத்தில் வாழ்கிறேன்.
No comments:
Post a Comment