Monday, May 19, 2014

என்னிடம் சரணடை!

12



அணுவளவும் நான் எனது என்ற உணர்வின்றி உமது இதயத்தில் உறைகின்ற என்னிடம் சரணடைந்து விடும். உடனே உம்மிடமிருந்து அறியாமை -  மாயை விலகும். சொற்பொழிவுகளைக் கேட்க வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விடும்.



நான் இப்பொழுது எங்கிருக்கிறேன்? உம்மை எப்படி சந்திக்கவருவேன்? என்றெல்லாம் நீர் கேட்கலாம். ஆனாலும், நான் உமது இதயத்தில் நின்று கொண்டிருக்கிறேன். ஆகவே, பிரசாசை ஏதும் இன்றியே உம்மை சந்திப்பேன்.



நீர் கேட்கலாம், யார் இந்த இதயத்தில் வசிப்பவர்? அவர் எப்படி இருப்பார்? அவருடைய அடையாளங்கள் யாவை? எந்தச் சாடையை, குறிப்பை வைத்து நான் அவரை அடையாளம் காண முடியும் என்று? இப்பொழுது யாரிடம் சென்றுசரணடைவது? உம்முடைய இதயத்தில் வசிப்பவர் யார்? என்பன பற்றிய தெளிவு நிரம்பிய வியாக்கியானத்தைக் கவனத்தைக் கொடுத்துக் கேளும்.



இந்த சிருஷ்டி நானாவிதமமான உருவங்களாலும் நானாவிதமான பெயர்களாலும் நிரம்பியிருக்கிறது. இவற்றை எவராலும் கணக்கெடுக்க முடியாது. இவை அத்தனையும் மாயையின் சொரூபங்கள். அது போலவே, சத்துவம் ராஜசம், தாமசம் ஆகிய முக்குணங்களுக்கு அப்பாற்பட்ட எந்த மெய்ப்பொருளை உள்ளுணர்வால் உமது மனத்தில் உணர்கிறீரோ அப்பொருளின் உருவத்தையே உமது இதய வாசியாக அறிவீராக.



பெயருக்கும் உருவத்துக்கும் அப்பால் உம்முள் ஒன்று இருக்கிறதே, அதுவே இதயவாசியாகிய இறைவனின் அடையாளம். இதை அறிந்து அவனிடம் சரணடைவீராக.



நீரும் நானும் ஒன்றே என்று பார்க்க ஆரம்பித்து, அப்பார்வையை விஸ்தாரப்படுத்தினால், உலகில் உள்ளது அனைத்தும் உமது குருவாகத் தெரியும். நான் இல்லாத இடமாக எதுவும் தெரியாது. இவ்வாறான ஆன்மீகப் பயிற்சியைத் தொடர்ந்து செய்துவந்தால், நான் எங்கும் வியாபித்து இருக்கும் அனுபவம் உமக்குக் கிட்டும். பினனர் நீர் என்னில் கலந்து விடுவீர். அன்னியம் என்று ஒன்றில்லை என்ற உணர்வை அனுபவிப்பீர்.



சத்சரித்திரம் - அத்தியாயம் 44

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...