பக்தர்களின் எண்ண ஓட்டங்களையும் உணர்வுகளையும் சமர்த்த சாயி மனக்கண்ணால் அறிவார். அவரவர்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்து தமது உறுதி மொழியை நிறைவேற்றுவார்.
மனமும் புத்தியும் புலன் உறுப்புகளும் உலக இன்பங்களைத் துய்க்க ஈர்க்கப்படும்போது முதலில் என்னை நினை. பிறகு அவற்றை அம்சம் அம்சமாக எனக்கு சமர்ப்பணம் செய்வாயாக. இவ்வுலகம் அழியும் வரை புலன்கள் அவற்றுக்கு உரிய நாட்டங்களால் ஈர்க்கப்பட்டே தீரும். இதைத் தடுக்க இயலாது.
ஆனால், அந்நாட்டங்களை குருவின் பாதங்களில் சமர்ப்பித்துவிட்டால் அவை இயற்கையாகவே வலுவிழந்துவிடும்.
புலன் இன்பம் துய்க்க வேண்டும் என்கிற சிறிய ஆசை தோன்றும்போதே, பாபா நம்முடன் இருக்கிறார் என்ற எண்ணம், அந்த இன்பம் துய்ப்பதற்குத் தகுதியுடையதா, தகுதியற்றதா என்கிற கேள்வியை மனத்தில் எழுப்பும்.
தகுதியற்றதும் பொருந்தாததுமான உலக விசயம் சகஜமாகவே நிராகரிக்கப்படும். கெட்ட பழக்கம் உள்ளவன் அதிலிருந்து விடுபடுகிறான். நன்மை அளிக்காத விசய சுகங்களில் இருந்து திரும்பத்திரும்ப வெளியேறும் பயிற்சியினால், மனம் தனக்கு ஒவ்வாத உலக விசயங்களையும் சுகங்களையும் வெறுக்க ஆரம்பிக்கும்.
சத்சரித்திரம் - அத்தியாயம் 24
No comments:
Post a Comment