மகனோ, மனைவியோ, நண்பனோ இறுதியில் நமக்கு உதவுவது கிடையாது. தாங்கள் மட்டுமே இறுதி வரை எங்களுடன் வருவீர்கள் என்று இறைவனை வேண்டுகிறார்கள். இது எந்த அளவுக்கு உண்மை?
( என். நாகப்பன், திருப்போரூர்)
எல்லோரும் காரண காரியத்தோடு ஒன்று சேர்கிறோம். அதாவது ஒரே குடும்பத்தில் பிறக்கிறோம். காரணம் நிறைவேற என்று காரணம் காட்டி, ஒருவரை இழக்கவும், இழப்பினை ஏற்கவும் நாம் தயாராக இருப்போம். ஆனால், கடவுள் அப்படி அல்லர். எப்போதும் அவர் நம்மை அதிகமாக நேசிப்பவர்.
பகவான் ராமகிருஷ்ணர் சொன்ன ஒரு குட்டிக்கதை:
இளைஞன் ஒருவன் ஒரு சாதுவிடம் ஆத்ம சாதன விஷயங்கள் பற்றி பேசிக்கொண்டிருந்தான். அதன் இடையில் தன் தாய் தந்தையர், தாரம் ஆகியோர் தன்னை அதிகமாக நேசிப்பதாகக் கூறினான்.
இவர்களின் நேசம் உறுதியானது கிடையாது என்றார் சாது. அவரது கூற்றை இளைஞன் ஏற்றுக்கொள்ளவில்லை. அதை நிரூபிக்கச் சொன்னான்.
சாது ஒரு குளிகையைக் கொடுத்து, வீட்டுக்கு சென்றதும் இதை அருந்து. உண்மை உனக்குப்புரியும் என்றார். இளைஞன் அவ்வாறே செய்த சில நேரத்திற்குள் பிணம் போலாகிவிட்டான். பெற்றோரும் பாரியாளும் பரிந்து அழுது கொண்டிருந்தனர். அப்பொழுது அங்கு வந்த சாது, இளைஞனை பரிசோதித்து விட்டு, அவனுக்கு உயிர் கொடுக்க முடியும் என்றார்.
எப்படியாவது செய்து அவனை காப்பாற்றுங்கள் என்றனர் அவர்கள். இவன் ஒரு ஏவலால் கொல்லப்பட்டிருக்கிறான். வேறு ஒருவர் இவன் பொருட்டு உயிரைக் கொடுக்க சித்தமாக இருந்தால் ஏவலை போக்கி, இவனுக்குப்பதிலாக அவர் மீது அதை செலுத்திவிடுவேன். இவன் உயிர் பெற்று விடுவான்” என்றார் சாது.
ஏதேதோ சாக்குப்போக்குச் சொல்லி, பெற்றோரும் மனைவியும் தப்பித்துக்கொண்டனர். செத்தவனைப் போலக்கிடந்தானே தவிர, நடந்த நிகழ்வுகளை கவனித்துக்கொண்டிருந்தான். அவனது தொண்டைக்குள் இன்னொரு குளிகையை சாது செலுத்தினார். அவன் எழுந்தான். இப்போது தாங்கள் சொன்னது முற்றிலும் மெய் என்று கூறிவிட்டு, அனைவரையும் விடுத்து துறவியாகிவிட்டான்.
Subscribe to:
Post Comments (Atom)
குரு நம்பிக்கை
' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...
-
1. ஓம் சாய் நாதா போற்றி ஓம் ! 2. ஓம் தக்ஷிணாமூர்த்தி தத்தா அவதாரா போற்றி ஓம் ! 3. ஓம் சாகர சாய் போற்றி ஓம் ! 4. ஓம் பண்டரிபுர விட்ட...
-
காகத்திற்கு உணவிட்டால் ஏற்படும் நன்மைகள் என்ன.? காகம் பற்றிய உண்மைகளும் ஆன்மீக தகவல்களும்.! 1.அதிகாலையில் எழுந்து கரைதல். 2.உணவி...
-
நிச்சயமாக உனக்கு குழந்தை பாக்கியம் உண்டு! ” காலப்போக்கில் பாபாவினுடைய திருவாய் மொழி உண்மையாயிற்று...... அவருடைய ஆசிர்வாதம் பலனளித...
No comments:
Post a Comment