Wednesday, May 14, 2014

சாயி புத்ரன் பதில்கள்

11

அடியார்கள் வீழ்வதும், பக்தர்கள் நிலைப்பதும் எதனால் ஏற்படுகிறது?

(கோவை கீதாஞ்சலி, கோவை)

அடியார்கள் தாங்கள் மேம்பட்டவர்கள், அனைத்தையும் கடந்தவர்கள், பகவானுக்கு நெருங்கிய உரிமையுடையவர்கள், அவனை அறிந்தவர்கள் என்றெல்லாம் நினைத்து, கர்வம் கொள்ளுவது சகஜம். அவர்களுடைய வித்யாகர்வம் என்கிற இத்தகைய மமதையின் காரணமாக வீழ்ந்துவிடுகிறார்கள்.

அவர்களால் வழி நடத்தப்படுகிற பக்தர்கள் எப்போதும் இறைவன் நினைவுடனும், நாமஸ்மரணை செய்தும் பக்தி செலுத்துவார்கள். இப்படிப்பட்ட பக்தியினால் எப்போதும் இறைவன் பாதத்தில் லயித்திருப்பார்கள். இதனால் அவர்கள் நிலைத்திருக்கிறார்கள்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...