Thursday, May 22, 2014

நம்பிக்கை எப்படியோ அப்படியே அனுபவம்!

birthday



நம்பிக்கை எப்படியோ அப்படியே அனுபவம்! என்று சத்சரித்திரம் 33 - வது அத்தியாயம் கூறுகிறது. நம்பிக்கை இல்லாமல் கடவுளிடம் அற்புதங்களை பெற நினைப்பது வியர்த்தம், வீணான முயற்சி. அசைக்க முடியாத நம்பிக்கையிருந்தால் அனைத்து விசயங்களும் நம் வசமாகிவிடும்.



பாபாவின் செயற்கரிய செயல்கள் கற்பனைக்கு எட்டாதவை. அவை மனதில் அழியாத சுவடுகளை பதிக்கும். இந்த அற்புதங்களை நாம் சொந்தமாக்கிட, பாபா ஒரு சாதனத்தை நமக்காகக் கொடுத்திருக்கிறhர்.



அதுதான் அவரது யோக சக்தியால் உருவான துனியிலிருந்து வந்து கொண்டிருக்கிற உதி.  இந்த உதி அனைத்து விக்ஷயங்களையும் நமக்கு சாதகமாக்கிக்கொடுக்கும்.



மந்திரமாவது நீறு என்பார் சம்பந்தப் பெருமான். வல்வினை போக்குவதும், மந்திரமாவதும், நமது வேலைகளை முன் வந்து செயல்படுத்துவதும், அனைத்தையும் நமக்கு சாதகமாக மாற்றுவதும் இந்த உதியே என்பதை அறிந்து கொள்ளுங்கள்.



பாபாவின் உதி கிடைக்கவில்லை. என்ன செய்வது?



பயப்படவேண்டாம். எதை உதியாக  நம்பிப்  பயன் படுத்தினாலும் அதற்கான பலன் நிச்சயம் உண்டு. நாசிக் நகரத்தைச் சேர்ந்த ஜனீ என்ற சாயி பக்தர் பாபாவின் அற்புதங்களை நிறைய அனுபவித்தவர்.



ஒருமுறை இவரது  நண்பரை  தேள் கொட்டிவிட்டது.  நண்பர் வலியாலும் வேதனையாலும் துடித்தார். ஜனீக்கு உதி கிடைக்கவில்லை. பாபாவின் நிழற்படத்தை நோக்கி பிரார்த்தனை செய்தார். படத்தின் கீழே ஊதுவத்தியிலிருந்து விழுந்த சாம்பல் சிறிது இருப்பதை பார்த்தார். அதை உதியாக நினைத்து, ஒரு சிட்டிகை எடுத்து, தேள் கொட்டிய இடத்தில் சாயி நாம மந்திரத்தைச் சொன்னபடியே தடவினார்.



கொட்டுவாயில் சாம்பலைப் பூசிய உடனே, வலியும், வேதனையும் மறைந்தன. கேட்பதற்கு நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். நம்பிக்கை எப்படியோ, அப்படியே அனுபவம். நம்பியவருக்கு நடராஜா.



சாமா ஒருமுறை கல்யாண் நகருக்கு சென்று கொண்டிருந்தார். அவரிடம் தெரிவிக்குமாறு பாந்த்ராவாசி ஒருவர் தகவல் அனுப்பியிருந்தார். தகவல் இதுதான்: ”வேறு கிராமத்தில் வசிக்கிற தனது மகள் பிளேக் நோயாலும், காய்ச்சலாலும் அவதிப்படுகிறார். பாபாவிடம் பிரார்த்தனை செய்து இந்தக் கவலையில் இருந்து விடுதலை செய்யவேண்டும்…”



செய்தியைக் கொண்டு போனவர் நானாவை வழியில் தாணே ரயில் நிலையம் அருகில் சந்தித்தார். சாலையில் நின்றவாறே, சாயியை மன்றாடிப் பிரார்த்தித்து, சாலையின் புழுதி மண்ணில் ஒரு சிட்டிகை எடுத்து, தன் மனைவியின் நெற்றியில் இட்டார். பிறகு சென்றுவிட்டார்.



பாந்த்ராவாசி, தன் மகளைப் பார்க்கச் சென்றார். மூன்று நாட்களாக இருந்த கடுமையான காய்ச்சல், தந்தையார்  சென்ற  நாளுக்கு முன்நாள் தான் குறைய  ஆரம்பித்தது என்று தெரிய வந்தது.



பாந்த்ரா வாசி, பின்னோக்கி யோசித்துப் பார்த்தார். அது, நானா தனது மனைவியின் நெற்றியில் புழுதி மண்ணைப் பூசிய நேரத்திலிருந்துதான் அற்புதம் ஆரம்பித்தது என்பது புரிந்தது.



நம்பிக்கை எப்படியோ அனுபவம் அப்படியே பாபா, நானாவுக்கு மட்டும் கடவுள் அல்ல, உங்களுக்கும் கடவுள். அவர்  இப்போதும், எப்போதும் உயிரோடு வாழ்கிற -  உங்களுக்காக வாழ்கிற கடவுள். அவரிடம் அற்புதத்தைக் கேட்டுப் பெறலாம்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...