Thursday, May 15, 2014

சாயிபுத்ரன் பதில்கள்

25129

ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும் என்கிறார்களே இதற்குப் பொருள் என்ன?
( கே. சரவணன், சென்னை - 63)
எளியோர் என யாரையும் அலட்சியம் செய்யாதீர்கள். நாளைக்கு அவர்கள் உயர்வடைந்து, நாம் தாழ்கிற நிலை உண்டானால் சிரமப்பட வேண்டிருக்கும் என்ற பொருளில் இதைச்சொல்லியிருப்பார்கள் என்றுதானே நினைக்கிறீர்கள்.
ஆனை - அதாவது ஆவின் நெய். பூனை - பூவின் நெய் (தேன்) எனப் பிரித்துப் படிக்கவேண்டும். உடலை வளர்க்க நெய் கலந்து உண்பார்கள். நெய் கலந்து உண்ணும் வசதியான வாழ்க்கைக்கு ஒரு காலம் இருப்பதைப் போல, பூ நெய்யைத் தேட வேண்டிய ஒரு காலமும் உண்டு. அதாவது நோய் வந்து விட்டால் மருந்துகளை தேனில் குழைத்துக்கொடுப்பார்கள். இந்த மருந்துகள் இல்லாமல் வாழ்க்கையை நகர்த்த முடியாத காலமும் வரும்.
உடம்பை வளர்ப்பவர்களே, ஒரு நாள் நோயும் வரும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் என்பது இதற்குப் பொருள்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...