Saturday, November 23, 2013

டாக்டர் பண்டித்

     

ஒருமுறை தாத்யா ஸாஹேப் நூல்கரின் நண்பர் டாக்டர் பண்டித் பாபாவை தரிசனம் செய்வதற்காக சிர்டீக்கு வந்தார்.  சிர்டீயில் வந்து இறங்கியவுடனே அவர் மசூதிக்குச் சென்று பாபாவுக்குப் பலமுறை நமஸ்காரம் செய்துவிட்டு, சிறிது ஓய்வெடுப்பதற்காக அங்கு அமர்ந்தார். 
      பாபா அவரிடம், ''போம், தாதா பட்டிடம் போம், இந்த வழியாகப் போம் என்று சொல்­லி, விரலால் வழிகாட்டி அவரை மூட்டைகட்டி அனுப்பிவிட்டார்பண்டித், தாதா பட்டின் வீட்டிற்குச் சென்றார்; மரியாதையான நல்வரவளிக்கப்பட்டார். தாதா அப்பொழுதுதான் பாபாவுக்குப் பூஜை செய்வதற்காக எல்லாப் பொருள்களையும் தயார் செய்துகொண்டு கிளம்பிக்கொண் டிருந்தார். பண்டித்தைத் தம்முடன் வர விருப்பப்படுகிறாரா என்றும் கேட்டார். 
      பண்டித் இதற்குச் சம்மதித்து தாதாவுடன் சென்றார். தாதா பூஜையைச் செய்தார். அந்நாள்வரை பாபாவினுடைய நெற்றியில் வட்டமாகச் சந்தனம் இடுவதற்கு எவருக்குமே தைரியம் இருந்ததில்லை. 
      பக்தர் எவராக இருப்பினும், எக்காரணத்திற்காக வந்திருந்தபோதிலும், பாபா அவரை நெற்றியில் சந்தனம் இடுவதற்கு அனுமதிக்கவில்லை. மஹால்ஸாபதி ஒருவர் மட்டுமே கழுத்தில் சந்தனம் பூச அனுமதிக்கப்பட்டார். மற்றவர்கள், பாதங்களுக்கே சந்தனம் இட்டனர். 
      டாக்டர் பண்டித்தோ குழந்தையுள்ளம் படைத்தவர்; கபடமில்லாதவர்; பக்திமான். அவர் தாதா வைத்திருந்த சந்தனப்பேலாவை வெளியே எடுத்து, ஸாயீயினுடைய தலையை ஒரு கையால் பிடித்துக்கொண்டு மற்றொரு கையால் நெற்றியில் அழகான மூன்று நீளமான பட்டைகள் இட்டுவிட்டார். 
      அவருடைய ஸாஹஸச் செயலைக்கண்டு தாதா கலவரமடைந்தார். ''! என்ன ஸாஹஸம் இது! பாபா இதைச் செய்ததால் சீறமாட்டார்?”  (என்று அவர் நினைத்தார்)     நடக்கவேமுடியாதது நடந்துவிட்டதெனினும், பாபா ஒரு வார்த்தையும் பேசவில்லை.  மாறாக, அவர் முகம் பிரஸன்னமாகவே இருந்தது; கோபக்குறி துளியும் காட்டவில்லை. 
      இந்நிகழ்ச்சி நடந்து முடிந்துவிட்டது. ஆனால், தாதாவினுடைய மனமோ அறுத்துக்கொண் டிருந்தது. அன்று சாயங்காலமே பாபாவை அதுபற்றி வினவினார். 
      ''நாங்கள் ஒரு சிறிதளவு சந்தனம் நெற்றியில் இடுவதற்கு முயலும்போது நீங்கள் எங்களைத் தொடவும் அனுமதிப்பதில்லை. இன்று காலையில் நடந்தது என்ன? நாங்கள் இடுவதற்கு முயலும் சந்தனத் திலகத்திற்கு அபார ஆவ­ன்மையும் வெறுப்பும் காட்டுகிறீர்; டாக்டர் பண்டித் இட்ட திரிபுண்டரத்தின்மேல் என்ன ஏகப் பிரியம்? இதென்ன விசித்திரமான நடத்தை. நடத்தை ஒரே சீராக இல்லையே?”.
      பாபா முகத்தில் ஒரு புன்முறுவலைத் தவழ விட்டுக்கொண்டு, இந்த மதுரமான வார்த்தைகளைப் பிரீதியுடன் தாதாவிடம் கூறினார். கவனமாகக் கேளுங்கள். 
     ''தாதா, அவருக்கு குரு ஒரு பிராமணர்; நான் ஜாதியில் முஸ்லீம் என்பதை ஞாபகப்படுத்திக்கொள்ளும். இருப்பினும், அவர் என்னைத் தம் குருவாகவே கருதி, எனக்கு குருபூஜை செய்தார். 'நான் ஜாதியில் மிகப் புனிதமான பிராமணன்; இவரோ ஒரு புனிதமற்ற முஸ்லீம்; அவரை எப்படி நான் பூஜை செய்ய முடியும் என்ற ஸந்தேஹம் அவருக்குத் தோன்றவே இல்லை.--
 எனக்கு எந்த உபாயமும் கொடுக்காமல், இப்படித்தான் அவர் என்னை ஏமாற்றிவிட்டார். நான் மறுப்பதற்கு இடங்கொடுக்காமலேயே அவர் என்னை முழுமையாக வெற்றிகொண்டுவிட்டார்”.
      தாதா இந்த விவரணத்தைக் கேட்டார்; ஆனால், அதை ஒரு நகைச்சுவையாகவும் இங்கிதமான பேச்சாகவுமே எடுத்துக்கொண்டார். வீடு திரும்பும்வரை தாதாவுக்கு உண்மையான முக்கியத்துவம் விளங்கவில்லை. 

      பாபாவினுடைய இந்த முன்னுக்குப்பின் முரணான செயல், தாதாவை 

மனம் குமுறச் செய்தது. ஆனால், இந்நிகழ்ச்சியைப்பற்றி டாக்டர் பண்டித்திடம் 

பேசிய உடனே பாபா தம்முடைய செய்கைகளில் ஒரே சீராக இருந்தது நன்கு 

விளங்கியது.

ஸ்ரீ சாயி சத்சரித்திரத்திலிருந்து

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...