Monday, November 18, 2013

ஒரு பக்தையின் அனுபவம்



ஸத் சரிதப் பாராயணம் முடித்த மறுநாள் அகண்ட பஜனில் என் கணவர் 

குழந்தைகளோடு கலந்து கொண்டேன். சற்று நேரத்துக்குப் பின், எனது 

இரண்டரை வயது மகன் அழுததால், அங்கிருந்து கிளம்பி வாசலில் என் 

கணவரின் காருக்காகக் காத்திருந்தேன். இரவு 11 மணி இருக்கும். 

அப்போது தனது மனைவி மற்றும் வயதான தாயுடன் ஒரு சீக்கியர் 

என்னை நோக்கி விரைந்துவந்து, என் கைகளில் ஏதோ ஒரு புத்தகத்தைக் 

கொடுத்துவிட்டு தங்கள் வாகனத்தில் ஏறி விரைந்தனர். அது 

என்னவென்றுகூடப் பார்க்காமல் அதை என் கைப்பையில் போட்டுக் 

கொண்டேன். காரில் ஏறியதும் அது ஸாயி 9 வார விரதக் கதை எனத் 

தெரிந்தது. பாபா எனக்கு அளித்த சமிஞ்ஞை என நினைத்து அதை 

முறையாகச் செய்து முடித்தேன்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...