மூன்றாவது வருடம்
பாலபுவா ஸாதார்கரே சரியான சந்தர்ப்பத்தில் சிர்டீக்கு வந்து சேர்ந்தார். இது
எப்படி நடந்தது என்பதை கவனமாகக் கேளுங்கள்.
ஸாயீ பாபாவின்
கீர்த்தியைக் கேள்விப்பட்டபிறகு பாபாவை தரிசனம் செய்ய வேண்டுமென்ற ஆவல் அவர்
மனத்தெழுந்தது. அவருக்கு வழித்துணைக்கு ஒருவர் தேவை; துணை எப்படிக் கிடைக்கும் என்பதே அவருடைய சிந்தனையாக இருந்தது.
பாலபுவா ஒரு ஹரிதாஸர் (கதாகாலட்சேபம்/கீர்த்தனம்
செய்பவர்); ஸாதாரா என்னும் ஊரில் பிறந்தவர்; ஆனால், அச்சமயத்தில் அவர் பம்பாய் நகரத்திலுள்ள
பரேல் வசித்துவந்தார்.
ஸாதாரா ஜில்லாவில் பிர்ஹாட் ஸித்த கவடே
என்னும் தேவஸ்தானம் ஒன்று இருந்தது. ஸ்ரீராமநவமியன்று அங்கே கதாகாலட்சேபம்
செய்வதற்காக ஸாதார்கர் வருடாந்திரமாக ஒரு மானியம் பெற்றுக்கொண் டிருந்தார்.
அந்த தேவஸ்தானத்துடன் அவருக்கு
வருடாந்திரமாக இரண்டு உற்சவங்களுக்கு சம்பந்தம் இருந்தது; ஒன்று ஆடிமாத ஏகாதசி, இரண்டாவது சித்திரை மாதத்தின் ஸ்ரீராமநவமி. மொகலாயச் சக்கரவர்த்தி (அக்பர்) ஏற்படுத்திய சாசனத்தின்படி நூற்று
இருபத்து நான்கு ரூபாய், செலவுகளுக்காக அங்கீகாரம்
செய்யப்பட்டிருந்தது. மூலஸமஸ்தானத்திருந்து முறைப்படி இத்தொகை இந்தக் கோயின்
குறிப்பிட்ட பாலபுவாவுக்கு இவ்விரண்டு உற்சவங்களுக்காக முப்பது ரூபாய் ஸன்மானமாக
அளிக்கப்பட்டது. ஆனால், அவ்வருடம் கவடேயில் காலரா நோய் கண்டு, கிராமமக்கள் அவதிப்பட்டனர்.
அதனால், ஸ்ரீராமநவமி உற்சவம் கொண்டாடமுடியவில்லை. மக்கள் கிராமத்தைக் காலி செய்துவிட்டு வெளியில் போய்விட்டதாகவும் அடுத்த வருடம் வரச்சொல்லியும் புவாவுக்குக் கடிதம் வந்தது.
அதனால், ஸ்ரீராமநவமி உற்சவம் கொண்டாடமுடியவில்லை. மக்கள் கிராமத்தைக் காலி செய்துவிட்டு வெளியில் போய்விட்டதாகவும் அடுத்த வருடம் வரச்சொல்லியும் புவாவுக்குக் கடிதம் வந்தது.
சுருங்கச் சொன்னால், ஸ்ரீராமனுக்கு ஸேவை செய்யும் பாக்கியமும் ஸன்மானமும் புவாவிற்கு
அவ்வருடம் கிடைக்காமல் போய்விட்டன. ஆனால், அது அவருக்கு சிர்டீ செல்வதற்கு ஒரு நல்வாய்ப்பாக அமைந்தது. ஆகவே, புவா ஹரி ஸீதாராம் தீக்ஷிதரைச் சந்தித்தார்.
தீக்ஷிதர் பாபாவின் பரமபக்தராதலால், அவர் மனது வைத்தால் சிர்டீக்குப் போகும் விருப்பம் நிறைவேறும்; சொந்தக் காரியமும் நடக்கும்; சுவாமி காரியமும் நடக்கும்; என்று அவர் நினைத்தார்.
தீக்ஷிதர் பாபாவின் பரமபக்தராதலால், அவர் மனது வைத்தால் சிர்டீக்குப் போகும் விருப்பம் நிறைவேறும்; சொந்தக் காரியமும் நடக்கும்; சுவாமி காரியமும் நடக்கும்; என்று அவர் நினைத்தார்.
அவர் தீக்ஷிதரிடம் கூறினார், ''இந்த வருடம் எனக்கு ஸன்மானம் கிடைக்காமல் போய்விட்டது. ஆகவே, நான் பாபாவை தரிசனம் செய்வதற்காகவும் கதாகாலட்சேபம் செய்வதற்காகவும்
சிர்டீ செல்லவேண்டுமென்று நினைக்கிறேன்.”
தீக்ஷிதர் பதில் கூறினார், ''ஸன்மானம் கிடைக்குமென்று நிச்சயமாகச் சொல்லமுடியாது. கொடுப்பதோ
இல்லையோ பாபாவின் கையில்தான் இருக்கிறது. கதாகாலட்சேபம் செய்வதற்கும் பாபாவின்
சம்மதம் தேவை.”
இருவரும் இவ்வாறு பேசிக்கொண்
டிருந்தபோதே காகா மஹாஜனி அங்கு வந்தார். சற்றும் எதிர்பாராமலேயே அங்கிருந்த
அனைவருக்கும் சிர்டீயின் உதி பிரஸாதத்தை அளித்தார். இது சுபசகுனமாகக்
கருதப்பட்டது.
மஹாஜனி அப்பொழுதுதான் சிர்டீயிருந்து
திரும்பியிருந்தார்; சிர்டீயில் அனைவரும் நலம் என்று தெரிவிப்பதற்காக
அப்பொழுது அங்கு வந்தார்; சிறிது நேரத்தில் வீட்டிற்குத்
திரும்பிவிட்டார்.
தாம் பாபாவை அனுமதி கேட்பதாகவும் அனுமதி
கிடைத்தால் நிச்சயமாக அவருக்குத் தெரிவிப்பதாகவும் தீக்ஷிதர் புவாவிடம் பரம
பிரீதியுடன் சொன்னார்.
யாத்திரைச் செலவைப்பற்றிக் கவலைப்படாமல்
சிர்டீக்கு வரச்சொல்லி புவாவுக்கு ஒரு கடிதம் வந்தது; இதற்காக ஒருவர் மனத்தில் சந்தேகங்களை எழும்பிக் கொண்டு
தொந்தரவுபடக்கூடாது என்ற குறிப்பும் இருந்தது.
சில நாள்களுக்குப் பிறகு தீக்ஷிதர்
சிர்டீக்குச் சென்றார்; பாபா தம்முடைய அனுமதியை அளித்தார்.
பாலபுவா சிர்டீக்கு வந்தார்; மனம் திருப்தியடையும் வரை ஸாயீ தரிசனம்
செய்தார்.
பாபாவும் மிகுந்த பிரேமையுடன்
ஸ்ரீராமநவமி உற்சவத்தைக் கோலாகலமாகக் கதாகாலட்சேபத்துடனும் பண்டிகைக்
குதூகலத்துடனும் பாலபுவாவை வைத்துத் தம்முடைய முன்னிலையில் நடத்திக்கொண்டார்.
பாலபுவாவும் தம்மைப் பொறுத்தவரை எண்ணம்
நிறைவேறியதுபற்றி மிக்க மகிழ்ச்சியடைந்தார். பாபாவுக்கும் சந்தோஷம்; எல்லாருடைய மனோரதமும் நிறைவேறியது.
புவாவுக்குக் கனத்த ஸம்பாவனை கிடைத்தது.
பாபாவின் ஆணைப்படி அவருக்கு நூற்றுமுப்பது ரூபாய் அளிக்கப்பட்டது. புவாவினுடைய
மகிழ்ச்சி கரைபுரண்டது.
கவடேயில் ஐந்து வருடங்களில்
கிடைக்கக்கூடிய வருமானத்தை பாபா ஒரே வருடத்தில் கொடுத்துவிட்டார். பாலபுவாவுக்கு
ஏன் சந்தோஷம் பொங்கி பாபாவிடம் விசுவாசம் அதிகரிக்காது?
ஆயினும், பின்னர் தாஸகணு சிர்டீக்கு ஒருமுறை வந்தபோது, ஸ்ரீராமநவமி கதாகாலட்சேபப் பொறுப்பு பாபாவின் அனுமதியுடன் அவரிடம்
ஒப்படைக்கப்பட்டது.
அன்றிருந்து இன்றுவரை ஸ்ரீராமஜன்மோற்சவம்
கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. ஏழையிலும் ஏழைகள் உட்பட அனைவரும் ஆனந்தம்
அடையுமாறு எல்லாருக்கும் அன்னதானம் செய்யப்படுகிறது.
அச்சமயத்தில் ஸமாதி மந்திரின் பிரதான வாயிலுக்கெதிரே மங்கள வாத்தியங்களின் முழக்கங்களுக்கு நடுவில் ஸாயீ நாமம் வானைப்பிளக்குமாறு எழுந்து, அவர்களுடைய மனத்தில் ஆனந்த அலைகளை எழுப்புகிறது.
அச்சமயத்தில் ஸமாதி மந்திரின் பிரதான வாயிலுக்கெதிரே மங்கள வாத்தியங்களின் முழக்கங்களுக்கு நடுவில் ஸாயீ நாமம் வானைப்பிளக்குமாறு எழுந்து, அவர்களுடைய மனத்தில் ஆனந்த அலைகளை எழுப்புகிறது.
ஸ்ரீ சாயிசத்சரித்திலிருந்து
No comments:
Post a Comment