Monday, November 11, 2013

சீரடியில் பறக்கும் இரு கொடிகள்











    ஸ்ரீராமநவமியன்று மேளதாளத்தோடு வாத்தியங்களும் முழங்க, பூஜையும் பஜனையும் செய்யப்படுகின்றன. உற்சவத்தில் கலந்துகொள்ள மக்கள் எல்லா திசைகளி­ருந்தும் வந்து சிர்டீயில் குவிகிறார்கள்.

    ஒவ்வொரு வருடமும் இரண்டு புதிய கொடிகள் மரியாதையாகச் சடங்குகளுடன் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு, நிரந்தரமாகப் பறந்துகொண் டிருக்குமாறு மசூதியின் உச்சியில் கட்டப்படும்.

    இவ்விரண்டு கொடிகளில் ஒன்று நிமோண்கருடையது.  மற்றொன்று தாமு அண்ணாவினுடையது.  இரண்டும் கோலாகலமாக ஊர்வலத்தில் எடுத்துச் செல்லப்பட்டு, மசூதியின் உச்சியில் கட்டப்பட்டுப் பட்டொளி வீசிப் பறக்கும். 

    சிர்டீக்குப் பெருமையும் ஆனந்தமும் அளிக்கும் ஸ்ரீராமநவமி கொண்டாடும் யோசனை உருஸ் திருவிழாவி­ருந்து எப்படி உதித்தது என்னும் சுவாரசியமான விவரத்தை இப்பொழுது கேளுங்கள். 

    1911ஆம் ஆண்டில் முதன்முதலாக ஸ்ரீராமநவமி உற்சவம் கொண்டாடப்பட்டது. இந்த யோசனை உருஸ் திருவிழாவி­ருந்து உதித்ததே. தொடர்ச்சியாகத் தடங்கல் ஏதும் இன்றி இன்றும் ஸ்ரீராமநவமி கொண்டாடப்படுகிறது. 

ஸ்ரீ சாயிசத்சரித்திலிருந்து

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...