Sunday, November 3, 2013

ஸாயீ மஹராஜ் சாந்தியின் இருப்பிடம்



     நிர்மலமான சிர்டீ என்னும் நீர்நிலையில் ஓர் அழகான தாமரை பாபாவின் ரூபத்தில் பூத்தது. விசுவாசமுள்ளவர்கள் அதன் மணத்தை மூக்கால் நுகர்ந்து ஆனந்தமடைந்தனர்; நம்பிக்கையும் பாக்கியமுமற்ற தவளைகள் சேற்றிலும் சகதியிலுமே உழன்றுகொண் டிருந்தன. 

     பாபா யோகாசனத்தையோ, பிராணாயாமத்தையோ, இந்திரியங்களைப் பலவந்தமாக அடக்குவதையோ, மந்திரத்தையோ, தந்திரத்தையோ, யந்திர பூஜையையோ, யாருக்கும் போதிக்கவோ விதிக்கவோ இல்லை. பக்தர்கள் காதில் மந்திரங்கூட ஓதவில்லை.
 
      மேலெழுந்தவாறு பார்க்கும்போது அவர் மற்றவர்களைப் போலவே பழக்கவழக்கங்கள் கொண்டவர் போன்று தெரிந்தார்; ஆனால், அகமுகமாக அவர் முற்றிலும் வேறுபட்டிருந்தார். உலகியல் செயல்பாடுகளில் அவர் மிக்க கவனமுடையவராகவும் கறாராகவும் இருந்தார். இது விஷயத்தில் அவருடைய திறமைக்கு ஈடு எவரிடமும் கிடையாது.
      பக்தர்களின் நன்மைக்காகவே ஞானிகள் அவதரிக்கின்றனர். அவர்களுடைய உணர்வுகள், உணர்ச்சி வெளிப்பாடுகள், உலகியல் செயல்பாடுகள் அனைத்துமே பக்தர்களுக்காகத்தான்; இதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். 

      ஸாயீ மஹராஜ் சாந்தியின் இருப்பிடம்; சுத்தமான பரமானந்தம் வாசம் செய்யும் இடம். களங்கமில்லாத தூய இதயத்துடன் அவரை ஸாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்கிறேன். 


ஸ்ரீ சாயி சத்சரித்திலிருந்து

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...